கோவை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் மக்கள் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல், தமிழ்நாடு அரசு மக்களுக்கு பல்வேறு அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பரிசு தொகுப்புகள் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான டோக்கன் வினியோகம் செய்யும் பணிகளும் ஜனவரி 3 முதல் தொடங்கி மாவட்டங்கள் தோறும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில்,கோவை மாவட்டத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கும் பணிக்காக டோக்கன் வினியோகம் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தில் மொத்தம் 1540 ரேஷன்கடைகள் உள்ளன. இந்த கடைகள் வாயிலாக 11.11 லட்சம் கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இவற்றுடன், மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், 1992 பேர் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பொங்கல் தொகுப்பு பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ரேஷன்கடை வாயிலாக, டோக்கன் வழங்கும் பணி கடந்த ஜனவரி 3 முதல் துவங்கியது.தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் இந்த பணிகள் வேகமெடுத்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக இதற்கான பணிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணிகளில் கோவை மாவட்டத்திலுள்ள முக்கிய ஊர்களில் டோக்கன் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நேற்று முன்தினம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 3.40 லட்சம் டோக்கன் நேற்று கொடுக்கப்பட்டுள்ளது என, கோவை மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்துபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக இரண்டாம் நாளாக 6.59 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டது.
இரண்டாவது நாளாக சனிக்கிழமை 6 லட்சத்து 59 ஆயிரத்து 13 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதுவரை 59 சதவீதம் குடும்ப அட்டைடாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதில், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவை வழங்கப்படும். இதுதவிர இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025ஐ வழங்கும் வகையில் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
அதேபோல், தமிழக அரசு சார்பில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு பொங்கலுக்கு முன்னதாக ரேஷன் அட்டைகளை விரைந்து வழங்கிடவும், அரசு ஊழியர்கள், பள்ளி கல்லூரிகள் என அனைத்திற்கும் பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை அளித்தும் உத்தரவிட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications