தமிழர் பண்டிகையான பொங்கல் திருவிழா தொடங்க இன்னும் 21 நாட்கள் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் கோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேபோல், தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பரிசு தொகுப்புகளும் வழங்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த ஆண்டின் பொங்கல் பரிசு தொகுப்பு ஆனது, ரேஷன் அட்டைக்கு மூன்று முக்கிய இலவசங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான முழுவீச்சில் தமிழக அரசு தயாராகி வருகிறது. இந்த பரிசுதொகுப்பில் பொங்கல் வைக்க தேவையான பொருட்களுடன் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு மக்கள் பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாட ரேஷன் கடையில் பச்சரிசி, வெள்ளம், சர்க்கரை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு பரிசாக வழங்கப்பட உள்ளன. அத்துடன் ரொக்கமாக ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த ரொக்கமானது, கொரோனா தொற்று ஏற்பட்டதிற்கு பின்பு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் மகளிர் உரிமைத்தொகையும் வழங்கபட உள்ளது. ஆகவே, மொத்தம் ரூ.2000 வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூடுதல் ரூ.1000 ஆனது பெரும்பாலான குடும்பங்களில் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி ஆகும். ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் இல்லை.
அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுதொகுப்பில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் வேட்டி, சேலைகள் வழங்க டெண்டர்கள் விடப்பட்டு அவை அனைத்தும் தயார்நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் வெளியான அறிவிப்பு வெளியான உடன் அந்த தேதியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து இவற்றை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மகளிருக்கான உரிமை தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு 10 ஆம் தேதிக்கு முன்னதாகவே வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய், இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும் என பொதுமக்களுக்கு மூன்று ஜாக்பாட் அடிக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications