தூத்துக்குடி: தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி என்பது குறிப்பிட்ட மாவட்டங்களோடு மட்டும் நின்றுவிடக்கூடாது அனைத்து மாவட்டங்களுக்கும் அது பரவலாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் சென்னை தாண்டி பல்வேறு மாவட்டங்களிலும் தொழில் பூங்காக்கள் நிறுவப்பட்டு பல்வேறு நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வின்பாஸ்ட் ஆலை திறப்பு: மிக முக்கியமானதாக தூத்துக்குடி மாவட்டத்தில் வின்பாஸ்ட் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு ஆலையை திறந்து வைத்து முதல் காரில் கையெழுத்திட்டு விற்பனையும் தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் இந்த பயணத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் முதலீட்டாளர் மாநாடும் நடத்தப்பட்டது.

49 ,845 வேலைவாய்ப்புகள்: தூத்துக்குடியில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 49 ,845 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 32,554 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கும் வகையிலும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இது தவிர 1230 கோடி ரூபாய் முதலீட்டில் 3,100 பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் நான்கு முடிவுற்ற திட்டங்களின் வணிக உற்பத்தியையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
புரிந்துணர்வு ஒப்பந்தம்: இதில் சிங்கப்பூரை சேர்ந்த RGE நிறுவனம் செயற்கை இழை உற்பத்தி ஆலையை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் உற்பத்தி ஆலை அமைக்க முன்வந்துள்ளது. 4,953 கோடி முதலீட்டில் இந்த ஆலை நிறுவப்பட்டு 1065 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
மின்னணு பாகங்கள்: Kaynes circuit பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 4700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 4995 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம் கேமரா மாடியூல், லேமினேட் போன்ற மின்னணுவியல் உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது.

ரயில் பெட்டி ஆலை: Yeemak & jeanvus என்ற நிறுவனம் 3,400 கோடி ரூபாய் முதலீடு செய்து தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் நுகர்வோர் மின்னணு உதிரி பாகங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம் இதன் மூலம் 7600 வேலை வாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது. இதே போல சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனம் இந்திய ரயில்வேக்கு ரயில் பெட்டி உற்பத்திக்கான உதிரிபாகங்களை தயாரித்து வழங்குகிறது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் 1500 கோடி ரூபாய் முதலீட்டில் ஆலை அமைக்க முன்வந்துள்ளது.
பாதுகாப்பு துறை ஆலை: வெடிப்பொருள் உந்து சக்தி உற்பத்தி மற்றும் பரிசோதனை ஆலையை தூத்துக்குடியில் அமைப்பதற்கு சக்தி குழுமம் முடிவு செய்துள்ளது . இதற்காக 5000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தி ஆலை முதன்முறையாக தூத்துக்குடியில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த ஆலை மூலம் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
விண்வெளி தொழில்நுட்பம்: விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான Ethereal exploration guild நிறுவனம் தூத்துக்குடியில் ராக்கேட் என்ஜின்கள் உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கிறது. தென்கொரியாவை சேர்ந்த தோல் அல்லாத காலணி உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக இருக்கும் hwaseung நிறுவனம் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையிலான ஒரு உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கிறது.
பெருகும் வேலைவாய்ப்புகள்: Agnikul cosmos, Hyundai kefico , salo tech motherson solar, Michelin tyres, Mobius energy என டயர், சோலார் பேனல் உள்பட பல துறைகளிலும் நிறுவனங்கள் ஆலைகளை அமைக்க முன் வந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் வருகை தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை பெருக்க உள்ளன.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications