பத்திரப்பதிவில் வரும் அதிரடி மாற்றம்!! இனி சார்பதிவாளர் அலுவலகமே போகத் தேவையில்லை..!!

தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கூடிய விரைவில் பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கே செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பத்திர பதிவு செய்யும் வகையில் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.

பொதுவாக வீடு, மனை , சொத்து உள்ளிட்டவற்றை நாம் வாங்கும் போது அதற்கான பத்திரப்பதிவு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்வதற்கு முன்கூட்டியே நாம் பதிவு செய்து டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும். முகூர்த்த நாட்கள் என்றால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்டம் அலைமோதும்.

பத்திரப்பதிவில் வரும் அதிரடி மாற்றம்!! இனி சார்பதிவாளர் அலுவலகமே போகத் தேவையில்லை..!!

பத்திரப்பதிவின்போது அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்க வேண்டும், சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் வந்து கையெழுத்திட வேண்டும். ஒருநாள் முழுவதையுமே நாம் பத்திரப்பதிவுக்காக செலவிட்டாக வேண்டும். இந்த நிலையில் தான் சொத்துக்களை பத்திரப்பதிவு செய்வதற்கு புதிய நடைமுறைகளைக் கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக 18 வகையான புதிய சேவைகளை அறிமுகம் செய்ய இருக்கிறதாம்.

தற்போது பத்திரப்பதிவுத்துறையில் ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது இதற்கு பதிலாக ஸ்டார் 3.0 என்ற புதிய மென் பொருளை அறிமுகம் செய்யும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு 2021 ஆம் ஆண்டிலேயே வெளியாகியிருந்தாலும் அந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நவீன வசதிகள் கொண்ட புதிய மென்பொருளை அனைத்து பத்திர பதிவுத்துறை அலுவலகங்களிலும் இன்ஸ்டால் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்து விட்டால் பொதுமக்கள் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் வகையில் மாற்றங்கள் வந்துவிடும். அதாவது சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமலேயே டிஜிட்டல் கையெழுத்து போட்டு பத்திரங்களை டிஜிட்டல் முறையிலேயே பதிவு செய்து கொள்ள முடியும் என சொல்லப்படுகிறது.

பத்திரபதிவு கட்டணங்களை கியூஆர் கோடு மூலம் செலுத்தும் வசதியும் வந்து விடுமாம். எனவே பொதுமக்கள் மணிக்கணக்கில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைத்துமே டிஜிட்டல்மயமாகுவதால் காகித பயன்பாடு குறைகிறது. இது தவிர பத்திரப்பதிவு பணிகளும் எளிமையாகி விடுகின்றன.

சென்னை, கோவை உள்ளிட்ட சில மண்டலங்களில் இந்த மென்பொருளை பயன்படுத்தி பத்திரப்பதிவு சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த சோதனைக்கு வெற்றி கிடைத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். அனைத்து அலுவலகங்களிலும் இந்த ஸ்டார் 3.0 மென்பொருள் சோதனை செய்யப்படும், இதனை அடுத்து அதிகாரப்பூர்வமாக முதலமைச்சர் இந்த பத்திரப்பதிவு நடைமுறையை தொடங்கி வைக்க இருக்கிறார். இதன் பிறகு பொதுமக்கள் பத்திரப்பதிவுக்கு அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+