தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. குறைவான வட்டியில் ரூ.20 லட்சம் கடன் வழங்கும் தமிழக அரசு..!!

பொதுவாக கடன் தேவைகள் அனைவருக்கும் இருக்கும். இதனால், கடன் வாங்குவோர் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலையும் ஏற்படுகிறது. நாட்டில் தனியார்துறை வங்கிகள், பதிவு செய்யப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடம் கந்து வட்டிக்கு கடன் பெறுவது தொடர்கதையாகி வருகிறது. எனவேதான், கடன்களை குறைந்த வட்டிக்கு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த திட்டத்தில் ஒருவர் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.

அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள சிறு வியாபாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு தமிழக அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் சிறு வணிகம் செய்வோருக்கு வணிக கடன் திட்டத்தின் கீழ் ரூ.1.25 லட்சமும், கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் தனிநபருக்கு ரூ.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. குறைவான வட்டியில் ரூ.20 லட்சம் கடன் வழங்கும் தமிழக அரசு..!!


ஒருவருக்கு பொதுவாக ஏற்படும் வாழ்நாள் செலவுகள் , திருமணம், மருத்துவ செலவுகள், வீடு கட்டுவது என பல்வேறு செலவுகளுக்கு மக்கள் வெளிநபர்களிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்குகின்றனர். அப்படி கடன் வாங்குபவர்கள் வாழ்நாள் முழுவதும் வட்டியை மட்டுமே கட்டி பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான், தமிழக அரசு பல்வேறு கடன் திட்டங்களை வழங்கி வருகிறது. அதுவும் குறைந்த வடியில் கடன் வழங்கப்படுகிறது.

அதேபோல், தினசரி வியாபரம் செய்யும் நபர்களுக்கு அரசின் தாட்கோ நிறுவனம் கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது சிறு வணிக கடன் என்ற திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. வணிக கடன் திட்டத்தில் 1 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் வீதம் சிறு வணிக கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தால் சிறு வணிக வியாபாரிகள் வட்டி கட்டும் நிலையை தடுக்கிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு 7 சதவீதத்தில் குறைவான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கென தமிழக அரசு நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மிகவும் குறைவான வட்டியில் 20 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க ஊழியர் சங்கங்களுக்கும் பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்சவரம்பினை 15 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

தனி நபர் கடன் பெறும் உறுப்பினர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக் காலம் 120 மாதங்கள் ஆகும். அதிகபட்சக் கடன் அளவு ரூ.20 லட்சம் அல்லது உறுப்பினர் பெறும் மொத்த சம்பளத்தில் 25 மடங்கு இதில் எது குறைவாக இருக்குமோ அந்த தொகை கடனாக வழங்கப்படும் என நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வழங்கப்படும் கடன் தொகையில் 5% பங்குத் தொகையாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+