சென்னை: தமிழ்நாடு அரசு சிறு புனல் மின் திட்டங்களுக்கான கொள்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி புனல் மின் திட்டங்களில் தனியார் நிறுவனங்களும் பங்கேற்க முடியும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த புதிய கொள்கையை வெளியிடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிறு புனல் மின் திட்ட கொள்கையின்படி 100 கிலோ வாட் முதல் 10 மெகாவாட் வரையிலான மின் நிலையத் திறன் கொண்ட சிறு புனல் மின் திட்டங்களை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருக்கிறது.
உள்ளூரிலேயே மின் உற்பத்திக்கான வாய்ப்பை உருவாக்குவது, ஊரகப்பகுதிகளில் மின் தேவையை பூர்த்தி செய்வது என இந்த கொள்கை பல்வேறு பலன்களை கொண்டிருக்கிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறு புனல் மின் திட்டங்கள் குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துபவை என தெரிவித்துள்ள அரசு எளிதான மற்றும் நிலையான எரிசக்தி வளமாக இது இருக்கும் என இது தொடர்பான அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த சிறு புனல் திட்டங்களை மேம்பாட்டாளர்கள் தங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் , இதில் கிடைக்கும் மின்சாரத்தை அரசுக்கும் விற்பனை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள பரிந்துரையில் புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்முதல் தேவையை பூர்த்தி செய்ய சிறு புனல் மின் திட்டங்கள் உதவும் என தெரிவித்துள்ளது.
கார்பன் வெளியீட்டை குறைத்து, புதுப்பிக்கத்தக்க மற்றும் தரமான மின் வளத்தை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும் இந்த திட்டம் மூலம் கால்வாய்கள், ஆறுகள், ஓடைகளிலிருந்து தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என அரசு கூறுகிறது. மேலும் மின்சாரத்திற்காக நிலக்கரியை சார்ந்து இருப்பதை குறைக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த கொள்கையானது ஐந்தாண்டு காலத்திற்கு செயல்பாட்டில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சிறு புனல் மின் திட்டங்களில் இருந்து மின் உற்பத்தி தொடங்கப்பட்டால் அந்த திட்டம் அடுத்த 40 ஆண்டுகள் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக அல்லது பல்வேறு நிறுவனங்களோ இணைந்து சிறு புனல் மின் திட்டங்களை அமைக்கலாம் அல்லது சுய தேவைக்காகவும் மின்சாரத்தை பரிமாறிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இத்தகைய சிறு புனலின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிறுவனமாக தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம் செயல்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் நீரை மீண்டும் அதன் வழியிலேயே திருப்பி அனுப்ப வேண்டும், ஓடையின் இயற்கையான பாதையில் மிகக் குறைந்தபட்ச இடையூறு மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒரு மெகாவாட் நிறுவுதல் திறனுக்கு 25,000 ரூபாய் ஆண்டு கட்டணமாக செலுத்த வேண்டும், உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 10% அரசுக்கு இலவசமாக தர வேண்டும் என அரசு கூறியுள்ளது. தற்போதைய சூழலில் தமிழ்நாடு அரசு நீர் மின் நிலையங்கள் மூலம் 2321.90 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்டிருக்கிறது. இதனை 25% உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications