தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் அதிகம் விரும்பும் அமைச்சர்களில் மிக முக்கியமானவர் பிடிஆர் என அழைக்கப்படும் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், பிடித்தவர்களும், கார்ப்ரேட் துறையில் வெற்றி கொண்டி நாட்டியவர்களும் அரசியலுக்கு வந்தால் பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை காட்டி பலருக்கும் முன்னுதாரணமாக இருப்பவர் பிடிஆர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மாநில அரசின் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் பொது மக்களுக்கு சேவைகளை எளிதாக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இ-சேவை மையங்களின் எண்ணிக்கை உயர்வு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோது மாநிலத்தில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கை 7,000 முதல் 8,000 வரை மட்டுமே இருந்ததாக குறிப்பிட்டார். தற்போது, இந்த எண்ணிக்கை 25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இது மக்களுக்கு அரசு சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் பெறுவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இ-சேவை மையங்கள் மூலம் பொது மக்கள் பல்வேறு அரசு சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்ஆப் மூலம் இ-சேவைகள்: மேலும், இ-சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்தும் வகையில், அவற்றை வாட்ஸ்ஆப் செயலி மூலம் ஒருங்கிணைத்து வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் பிடிஆர் அறிவித்தார். இதன் மூலம், பொது மக்கள் தங்கள் மொபைல் போன்களில் இருந்தே அரசு சேவைகளை பெற முடியும். இது, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலவச வை-பை சேவைகள்: தமிழ்நாட்டில் பொது இடங்களில் இணைய சேவை அதாவது இண்டர்நெட் சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் பொருட்டு, அம்மா உணவகங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட 3,000 இடங்களில் இலவச வை-பை சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிடிஆர் தெரிவித்தார். இது மக்களுக்கு இணைய சேவைகளை இலவசமாக பயன்படுத்த உதவுவதோடு, டிஜிட்டல் புரட்சியை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
கேபிள் டிவி ஆபரேட்டர்கள்
தமிழ்நாட்டில் உள்ள 4,700 பஞ்சாயத்துகளில் இணைய சேவைகளை வழங்குவதற்காக, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் இணைய சேவை வழங்கும் இத்திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் பிடிஆற் அறிவித்தார். இதன் மூலம், கிராமப்புறங்களில் இணைய சேவை அனைவருக்கும் மேம்படுத்தப்பட்டு, மக்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்களை பெற முடியும். இது, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற சேவைகளை எளிதாக பெற உதவும்.
200 ரூபாயில் இணைய சேவை
தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு மலிவு விலையில் இணைய சேவைகளை வழங்குவதற்கான திட்டம் விரைவில் அமலாக உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். அவரது கணிப்பின்படி, இத்திட்டத்தின் கீழ் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை மாதம் வெறும் 200 ரூபாய் கட்டணத்தில் இண்டர்நெட் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இது, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இணைய சேவைகளை பயன்படுத்துவதை உறுதி செய்யும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications