சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியும் வெளிநாடுகளுக்கு சென்றும் பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. குறிப்பாக காலணி உற்பத்தி, ஐடி துறை, செமி கண்டக்டர் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி என பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இந்த முதலீடுகள் தொடர்பான விளக்கம் அளிக்கக்கூடிய பிரத்தியேக மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்கம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பன உள்ளிட்ட தகவல்கள் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தமிழ்நாட்டின் உற்பத்தி துறையும், சேவை துறையும் சமமாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம் என்றார். நமது இளைஞர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான் அரசு பல்வேறு புரிந்துணர் ஒப்பந்தங்களையும் கொண்டு வந்து முதலீடுகளை செயல்படுத்தி இருப்பதாக உரையாற்றினார்.
முன்னதாக அரசு வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் படி கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையிலான ஐந்து ஆண்டுகளில் 10.43 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 1130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 33.30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.

முதலீட்டாளர் மாநாடு என்றாலே சென்னையில் தான் நடக்கும் என்பதை மாற்றி அந்தந்த மாவட்டங்களுக்கு என பிரத்தியேகமாக மாநாட்டை நடத்தி தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டில் தூத்துக்குடி, ஓசூர், கோயம்புத்தூர் என மாவட்டங்களை குறி வைத்து முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் என்பது வளர்ச்சிக்கான மாடல், ரிசல்ட் கொடுக்கக்கூடிய மாடல், மக்களுக்கு நன்மை கொடுக்கக்கூடிய மாடல் என கூறினார். தமிழ்நாட்டில் தொழில் துறையில் நாங்கள் செய்துள்ள ரெக்கார்டை அடுத்து நாங்கள் வந்து தான் முந்தப் போகிறோம் அடித்து சொல்கிறேன் இது உறுதி என முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது பேசினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டோம் என நின்றுவிடாமல் அந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆஃபர் லெட்டர் கிடைக்கும் வரை தமிழ்நாடு அரசு அனைத்தையும் பின் தொடர்கிறது என கூறினார். தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் ஆலை, ராணிப்பேட்டை டாடா ஆலை உள்ளிட்டவை இந்த ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டு செயல்படுத்தப்பட்ட முக்கிய முதலீடுகளாக இருக்கின்றன. தமிழ்நாடு அரசு இனி வரும் நாட்களில் ஏஐ, கப்பல் கட்டுமானம் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்த இருக்கிறது என இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications