தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தராததால் தான் மதுரை மற்றும் தூத்துக்குடி இடையிலான புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐசிஎஃப்-இல் அமிர்த் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மதுரை தூத்துக்குடி இடையிலான ரயில் பாதை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் அலுவலகம் மூடப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அருப்புக்கோட்டை வழியாக மதுரை தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை தொடர தமிழக அரசு தயாராக இல்லை என தெரிவித்தார். இந்த திட்டத்தை தொடர விரும்பவில்லை என தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக தங்களுக்கு தகவல் அனுப்பி வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 2024இல் தான் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அருப்புக்கோட்டை வழியே மதுரை தூத்துக்குடி இடையே ரயில் பாதை அமைப்பது உள்ளிட்ட புதிய ரயில்வே திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யும் படி மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கேட்டிருந்தார். ஆனால் தமிழ்நாடு அரசே இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வரவில்லை என மத்திய அமைச்சர் தற்போது பதில் அளித்திருக்கிறார்.
நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என குறிப்பிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழகத்துக்கு ரயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.
மாநில அரசு வேண்டாம் என கூறியதாலே மதுரை தூத்துக்குடி இடையிலான புதிய ரயில் பாதை திட்டம் முழுமையாக கைவிடப்பட்டது என அவர் விளக்கம் தந்துள்ளார். திருவள்ளூர் அருகே 2024 அக்டோபரில் கவரப்பேட்டையில் ரயில் தடம் புரண்ட விபத்து தொடர்பாக கேட்ட போது, போல்ட்கள் அகற்றப்படாத வகையில் புதிய போல்ட் வடிவமைப்புகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது என கூறினார். இது பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
தமிழ்நாட்டில் பாம்பன் பாலம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்று சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது என கூறினார், விரைவில் அந்த பாலமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
Story Written By: Devika
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications