நம் நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்ய விரும்பும் நபர் தனது பகுதி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று பதிவு செய்யலாம்.
அரசின் சலுகை, கல்வி, வேலை, வாக்காளர் அட்டை உள்ளிட்டவைகளை பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் அவசியம். அதேபோல் ஒரு மனிதரின இறப்பு சான்றிதழ் இருந்தால் அந்த நபரின் சொத்துக்கள், வங்கி பணம் உள்ளிட்டவற்றை வாரிசுகள் பெற முடியும். அதனால் ஒவ்வொருவரின் பிறப்பு மற்றும் இறப்பும் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.

முன்பு அரசு அலுவலகங்களில் கைகளால் எழுதப்பட்டு பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தது. அரசு சேவைகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு வருவதன் ஒரு பகுதியாக, 2018 ஜனவரி 1ம் தேதி முதல் பிறப்பு மற்றும் இறப்புகள் crstn.org என்ற இணையதளம் மூலம் மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
சில சமயங்களில் இந்த சான்றிதழ்களை சிலர் தவற விட்டு வாய்ப்புள்ளது. அப்படி தவறி விட்டால் மீண்டும் எளிதாக அந்த (2018க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு) சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
ஆன்லைனிலேயே பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ்களை நாம் பெற்றுக் கொள்வதற்கு அரசு வசதி செய்துள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். சான்றிதழ் தேவைப்படின் crstn.org என்ற இணையதளத்தில் பொதுமக்களே இலவசமாக பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தெரிவித்துள்ளது.
பிறப்பு இறப்பு சான்றிதழ் தேவைப்படின் முதலில் crstn.org என்ற வலைத்தளத்துக்கு செல்ல வேண்டும். பின்பு முகப்பு பக்கத்தில் certificate download என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு birth (பிறப்பு) அல்லது death(இறப்பு) -ல் உங்களுக்கு எந்த சான்றிதழ் தேவையோ அதனை கிளிக் செய்ய வேண்டும்.
இதனை தொடர்ந்து தேவையான விவரங்களை அதில் உள்ளீடு செய்த பின்னர் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். அரசின் இந்த புதிய வசதியால் மக்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய தேவையில்லை.


Click it and Unblock the Notifications