தமிழ்நாடு அரசு மாநிலத்தின் பல முக்கிய பகுதிகளை முக்கிய தொழில் நகரமாக மாற்றி வரும் வேளையிலும், அதற்கான உள்கட்டமைப்பையும் தொடர்ந்து மேம்படுத்தி வந்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சென்னை தான் இன்றளவும் முக்கிய முதலீட்டு நகரமாக உள்ளது.
இதேபோல் சென்னையில் ஏற்கனவே பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் தனது உற்பத்தி மற்றும் சேவை தளத்தை வைத்திருக்கும் வேளையில் புதிய முதலீடுகள் மூலம் அதை விரிவாக்கம் செய்யும் போது சென்னையில் தான் அதிகப்படியான முதலீடுகள் வருகிறது.

அந்த வகையில் சென்னையை சார்ந்த சுமார் 6000 கோடி ரூபாய் முதலீட்டுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஓரே நாளில் ஒப்புதல் அளித்து அசத்தியுள்ளதாம். தமிழ்நாடு அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதார மதிப்பை 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டுக்கு உயர்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் செயல்படும் வேளையில் சிறு சிறு முதலீடுகளை கூட விடாமல் பிடிக்கிறது தமிழ்நாடு அரசு.
சென்னை அப்டேட்ஸ் டிவிட்டரிவில் வெளியிட்டுள்ள தகவல் படி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசு சுமார் 6000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 7 திட்டத்தில் 6 முக்கிய திட்டங்கள் சென்னை சார்ந்த முதலீடாகும்.
பின்லாந்து நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தயாரிக்கும் Salcomp, பிரான்ஸ் நாட்டின் எலக்டிரிக் கருவிகள் தயாரிக்கும் Schneider, அமெரிக்காவில் UPS, மருத்துவ துறையில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்காவில் Pfizer, FMCG பிரிவில் அசத்தி வரும் காட்ரிஜ் கன்ஸ்யூமர் ஆகிய நிறுவனங்கள் சென்னையில் தனது சேவை தளத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது.
இதை தொடர்ந்து ஓசூர் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் தலா ஒரு எலக்ட்ரிக் வாகன முதலீட்டு திட்டங்களுக்கும், 2 டெக்ஸ்டைல் துறை சார்ந்த முதலீட்டுக்கும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள 9 திட்டங்களின் மொத்த மதிப்பு 6000 கோடி ரூபாய்.
இதில் முக்கியமாக சமீபத்தில் அமெரிக்காவின் FEDEX ஹைதராபாத்தில் தனது Global Capability Centre (GCC)-ஐ திறந்த நிலையில் இதற்கு போட்டியாக UPS சென்னையில் தனது Global Capability Centre-ஐ விரிவாக்கம செய்ய உள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டுன் முதலீட்டுகள், நிறுவனங்கள் ஈர்ப்பதில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா கடுமையாக போட்டிப்போடுகிறது.


Click it and Unblock the Notifications