தமிழ்நாட்டில் மனிதவளத்தைத் திறன்மிக்கதாக்க, ஐடிஐகளை டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைத்து தரம் உயர்த்துகிறது நமது Dravidian Model அரசு என தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்
இதை தொடர்ந்து ஏழை - எளிய, கிராமப்புற மாணவர்களும் இளைஞர்களும் குறைந்த கட்டணத்தில் பயிற்சி பெற்று, நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன் கொண்டவர்களாக வளர இந்த முயற்சி வழிவகுக்கும் என மு க ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு மற்றும் டாடா டெக்னாலஜிஸ் நிறுவன கூட்டணியில் 71 ஐ.டி.ஐ.களில் ரூ.2877.43 கோடி மதிப்பில் Industry 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்கள் அமைக்கும் இந்த முயற்சியில், இன்று முதற்கட்டமாக ரூ.762.30 கோடி செலவில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்நுட்ப மையங்களைத் தொடங்கி வைத்தேன் என முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமையிலான 20 சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 87.5 : 12.5 என்ற முதலீட்டு விகிதத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் முதலீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிகிறது.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை 2030க்குள் உயர்த்த வேண்டும் என முக்கிய இலக்குடன் தமிழக அரசு செயல்படுத்தி வரும் வேளையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை உற்பத்தியிலும் ஏற்றுமதி வாயிலாக உயர்த்த வேண்டும் என திட்டமிடப்பட்டு உள்ளது.
இதேவேளையில் தமிழ்நாட்டில் உலக நாடுகளில் இருந்து நிறுவனங்கள் உற்பத்தி தளத்தை அமைக்கும் வேளையில், அதிநிவீன கருவிகள், இயந்திரங்கள் இயங்கும் வகையில் மக்களின் திறன்களை உயர்த்த வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு உருவாக்கப்பட்டது தான் Industry 4.0 மேம்பாட்டு திட்டத்தை கையில் எடுத்தது.
Industry 4.0 திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாட்டில் மனிதவளத்தைத் திறன்மிக்கதாக்க, ஐ.டி.ஐ.களை டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைத்து தரம் உயர்த்துகிறது தமிழ்நாடு அரசு.
இதை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது டிவிட்டரில் முதல்வர் ஸ்டாலின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.763.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள '4.O' தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்து சிறப்பித்தார்.
அதில் ஒன்றாக திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.73 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 4.O மையத்தினையும் காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்து சிறப்பித்தார். மாணவர்கள் மற்றும் திருவெறும்பூர் தொகுதி மக்களின் சார்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications