பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ் என அரசின் சேவைகளை பெறுவதற்கு நாம் அரசு அலுவலகங்களுக்கும் இ சேவை மையங்களுக்கும் சென்று காத்திருக்க வேண்டும். இ சேவை மையங்களில் டோக்கன் வாங்கி நாள் முழுவதும் காத்திருக்க வேண்டும்.
அரசு அலுவலகத்திற்கு சென்றால் ஒரே நாளில் வேலை முடிந்துவிடுமா என்றால் முடியாது. சில நாட்களாவது அலைய வேண்டி இருக்கும். ஆனால் இனி எங்கேயும் செல்ல வேண்டாம். நாம் வீட்டில் இருந்தபடியே 50க்கும் அதிகமான அரசு சேவைகளை பெறலாம். இந்த ஒரு வாட்ஸ் அப் நம்பர் உங்கள் போனில் வைத்திருந்தாலே போதும்.

மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், அரசின் சேவைகள் எளிமையாகவும் விரைவாகவும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு வாட்ஸ்அப் சேவையை கொண்டு வந்துள்ளது. நம்ம அரசு என்ற இந்த வாட்ஸ் அப் சேவை வாயிலாக அரசின் பெரும்பாலான சேவைகளை நாம் இருக்கும் இடத்திலெயே பெற்று கொள்ளலாம்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள் பெறுதல் உட்பட 50 சேவைகளை தமிழ்நாடு அரசு வாட்ஸ் அப்பிலேயே வழங்க உள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே மக்கள் இனி வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்களை, 7845252525 என்ற வாட்ஸ்அப் (whatsapp) எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறலாம்.

7845252525 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் வணக்கம் அல்லது ஹாய் என மெசேஜ் அனுப்ப வேண்டும். உடனடியாக select department என்ற லிங்க் வரும். அதனை கிளிக் செய்தால் எந்தெந்த துறை சார்ந்த சேவைகள் பெறலாம் என்பதற்கான லிஸ்ட் காண்பிக்கப்படும். உங்களுக்கு எந்த துறையின் சேவை தேவையோ அதனை கிளிக் செய்து கொள்ளலாம்.
தேவையான விவரங்களை வாட்ஸ் அப்பிலேயே உள்ளிட்டு ஆவணங்களை பதிவேற்றி சான்றிதழ்களை வாட்ஸ் அப்பிலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துமே உட்கார்ந்த இடத்திலேயே நடக்கும். இதற்காக ஒரு நாள் வேலைக்கு லீவு போட வேண்டும் பள்ளி கல்லூரிக்கு லீவு போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
பொதுமக்கள் 78452 52525 என்ற வாட்ஸ்அப் எண்ணை தங்கள் போனில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். இதற்கு ஒரு மெசேஜ் அனுப்பி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மற்றும் சாதி மற்றும் வருமானம் உள்ளிட்ட தமிழக அரசின் வருவாய் துறை சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.
சென்னையில் இந்த சேவையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் அருண் ஸ்ரீனிவாஸ் மக்களுக்கு இனி அரசு சேவைகள் வாட்ஸ்அப்பில் மிக எளிதாக கிடைக்கும். அதோடு கால தாமதமின்றி விரைவிலேயே சான்றிதழ்கள் கிடைப்பது தான் இதன் முக்கிய நோக்கம் என்றார். விரைவில் இத்துடன் மேலும் பல சேவைகள் இணைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications