காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைந்துள்ளா இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம் தன்னுடைய ஆலையை நிறுவ இருக்கிறது. இதன் மூலம் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக இருக்கிறது.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம், ஒரகடம் தொழிற் பூங்காவில், 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. இந்த ஆலையில் மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த வேண்டும் என அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு கையில் எடுத்துள்ளது. சென்னை மட்டுமில்லாமல் புறநகர் பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களிலும் தொழிற்சாலைகளை கொண்டு வர அரசு தீவிரம் காட்டி வருகிறது.
குறிப்பாக மின்னணு சாதன உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் பெருமளவில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றன. அதன்படி டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில்,1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் தொடர்பான ஆலைகளை நிறுவ உள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், காஞ்சிபுரம் மற்றும் அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளது.
டிக்ஸன் டெக்னாலஜீஸ் என்பது 1993 ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் தொடங்கப்பட்ட ஒரு மின்னணு சாதன நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பல்வேறு வகையான மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து பெரிய பெரிய பிராண்டுகளுக்கு வழங்குகிறது. தொலைக்காட்சிகள், லேப்டாப்கள், வாஷிங்மெஷின்கள் ,ஸ்மார்ட்போன்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றை இது தயாரித்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நிறுவனம் 17 இடங்களில் உற்பத்தி ஆலைகளை வைத்திருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து தற்போது வரை தமிழ்நாடு அரசு 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது .இதன் மூலம் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 32 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications