தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் மாபெரும் சக்தியாக மாறி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் அமைந்திருக்கும் தொழிற்சாலையை அடுத்தகட்டமாக விரிவாக்கம் செய்து, ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
ஓசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருந்த நிலையில், தற்போது இதற்கு பச்சை கொடி காட்டியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்த அனுமதியைத் தொடர்ந்து டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது மாபெரும் விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.

டாடா குழுமம் ஓசூரை ஜாம்ஷெட்பூர் ஆக மாற்றும் பாதையில் ஓசூரில் தொடர்ந்து தனது டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்து வருகிறது. ஓசூரில் டாடா குழுமம் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்காக இதுவரையில் ரூ.3051 கோடி முதலீடு செய்துள்ளது.
இந்த நிலையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை, தற்போது அனுமதி பெற்ற புதிய விரிவாக்கத் திட்டத்திற்காகக் கூடுதலாக ரூ.3699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் 80,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை 1.49 லட்சம் சதுர அடி பரப்பளவில் செயல்பட்டு வரும் நிலையில், விரிவாக்கத்திற்குப் பிறகு 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இயக்கும். மேலும், தற்போது தினமும் 92,000 மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், விரிவாக்கத்திற்குப் பிறகு தினமும் 2 லட்சம் மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கவே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த மிகப்பெரிய முதலீட்டை செய்கிறது. ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாக்கம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியாக இருக்கும். இந்த விரிவாக்கத்தின் மூலம் 80,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் காரணத்தால், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு போதுமான வேலைவாய்ப்பு கிடைத்து வேலைவாய்ப்பின்மை அளவீடு குறையும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications