மகளிர் உரிமைத் தொகை திட்டம் - விண்ணப்பங்களின் நிலை என்ன? அதிர்ச்சியில் பெண்கள்!!

சென்னை: தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 1000 ரூபாயை அரசே மகளிர் உரிமை தொகையாக செலுத்தி வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை: தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனாளிகளாக உள்ளனர். மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகையை தங்களுடைய வங்கி கணக்கிலேயே பெற்று வருகின்றனர். இந்நிலையில் புதிதாக விண்ணப்பம் செய்ய காத்திருந்தவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என அரசு அறிவித்தது.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - விண்ணப்பங்களின் நிலை என்ன? அதிர்ச்சியில் பெண்கள்!!

உங்களுடன் ஸ்டாலின்: லட்சக்கணக்கான பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக ஜூலை மாதம் 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வரக்கூடிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பங்களை வழங்கிய வண்ணம் இருக்கின்றனர். சுமார் 17 லட்சம் மனுக்கள் வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - விண்ணப்பங்களின் நிலை என்ன? அதிர்ச்சியில் பெண்கள்!!

திடீரென நீக்கம்: இந்த விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் விண்ணப்பம் செய்தவர்களுக்கெல்லாம் 45 நாட்கள் முடிந்து அவர்களின் விண்ணப்ப நிலை தற்போது தெரிந்து இருக்க வேண்டும்.கலைஞர் மகளிர் தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்த பெண்கள் அதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் வசதி: இந்நிலையில் திடீரென அந்த வசதி நீக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான https://kmut.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்றால் முகப்பு பக்கத்திலேயே "உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிய" என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்தால் "அதிகாரிகள் உள்நுழைவு", "பொதுமக்கள் உள்நுழைவு" என இரண்டு ஆப்ஷன்கள் வரும், இதில் "பொதுமக்கள் உள்நுழைவு" என்பதை கிளிக் செய்தால் இந்த திட்டத்திற்காக விண்ணப்பம் செய்த பெண்கள் தங்களின் ஆதார் எண் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்ட போன் நம்பருக்கு வரும் ஓடிபி ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களின் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ள முடியும் .

மகளிர் உரிமைத் தொகை திட்டம் - விண்ணப்பங்களின் நிலை என்ன? அதிர்ச்சியில் பெண்கள்!!

விண்ணப்ப நிலையை எப்படி அறிவது?: மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் செய்து அதற்கான மெசேஜ் வராமல் இருந்த பெண்கள் பலருக்கும் இந்த வசதி விண்ணப்ப நிலையை அறிய உதவியாக இருந்தது. ஆனால் தற்போது பொதுமக்கள் உள் நுழைவு என்ற ஆப்ஷன் நீக்கப்பட்டு இருக்கிறது, அதிகாரிகள் உள்நுழைவு என்ற ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. இதனால் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்த பெண்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது .

பெண்கள் அதிர்ச்சி: ஜூலை15ஆம் தேதியிலிருந்து அடுத்த சில நாட்களில் மகளிர் உரிமை தொகை வேண்டி விண்ணப்பம் செய்த பெண்கள் தங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற நிலையை அறிந்து கொள்வதற்கு இருந்த ஒரே வாய்ப்பு இந்த இணையதளத்தில் இருந்த விண்ணப்பத்தின் நிலையை அறிய என்று ஆப்ஷன் தான் தற்போது அதுவும் நீக்கப்பட்டு இருப்பது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+