தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் கோயம்புத்தூர் பகுதியில் 4000 கோடி மதிப்பிலான 765 /400 கிலோ வாட் துணை மின் நிலைய திட்டத்தையும் அரியலூர் வரை நீட்டிக்கப்படும் மின்சார பரிமாற்ற பாதையையும் செயல்படுத்துவதற்கு ஆலோசகரை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு முதன்முறையாக கட்டண அடிப்படையிலான போட்டி ஏலம் துணை மின் நிலைய பராமரிப்புகளை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளது. ஏலத்தின் அடிப்படையில் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

இதன் கீழ் மாநில அரசு பவர் டிரான்ஸ்மிஷன் திட்டங்களின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க உள்ளது. குறிப்பிட்ட துணை மின் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன் இந்த ஏலத்தில் வெற்றி பெற்ற தனியார் நிறுவனம் மின் நிலையத்திலிருந்து எந்த ஒரு நிறுவனத்திற்கும் இங்கே உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்பனை செய்வதற்கான முழு அதிகாரத்தை பெறும் . இதில் டான் டிரான்ஸ்கோ முதல் மறுப்பு உரிமையை கொண்டிருக்கும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் தமிழக அரசு கட்டண போட்டி ஏல நடைமுறையை அறிமுகம் செய்தது. 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை தமிழ்நாடு டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் எனப்படும் டான் டிரான்ஸ்கோ தமிழ்நாட்டில் பவர் டிரான்ஸ்மிஷன் வசதிகளை மேலாண்மை செய்யும் அதிகாரம் பெற்று ஒரே நிறுவனமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது துணை மின் நிலையங்களை பராமரிப்பது மற்றும் செயல்படுத்தும் பணிகளை முதன்முறையாக தனியார் வசம் ஒப்படைக்க இருக்கிறது.
இதற்கான ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பொறுப்பு டான் டிரான்ஸ்கோவிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தால் நியமனம் செய்யப்படக்கூடிய இந்த ஆலோசகர் விரிவான திட்ட அறிக்கைகளை தயார் செய்வார் என்றும் அது மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அரசு ஒப்புதல் அளித்தவுடன் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களிடம் இந்த 765/400 கிலோ வாட் துணை மின் நிலைய திட்ட பணிகள் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் 1.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் ஆண்டுதோறும் 15 ஆயிரம் கோடி வட்டிக்காக மட்டுமே செலவிடப்படுகிறது. எனவே தான் மின் நிலைய மேலாண்மை மற்றும் செயலாக்க பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதாக கூறுகின்றனர்.
இந்த தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை கொண்டு செல்லும் லைன்களை அமைப்பதில் தொடங்கி மின்விநியோகம் மற்றும் உள்கட்டமைப்புகளை பராமரிப்பது செயல்படுத்துவது என அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications