தமிழ்நாடு அரசு முதலீட்டாளர் மாநாட்டில் செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் பாலிசி 2024-ஐ வெளியிட்டது. அடுத்த 30 வருட வளர்ச்சிக்கு அடித்தளமிடும் திட்டத்துடன் இந்தக் கொள்கை வெளியிடப்பட்டது மட்டும் அல்லாமல் உயர் தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவது முக்கிய இலக்காகக் கொண்டு இந்தக் கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது.
செமிகண்டக்டர் நிறுவனங்களை ஈர்க்க தமிழக அரசு சலுகைகளை அள்ளி கொடுத்துள்ளது, பல மாநிலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது மட்டும் அல்லாமல் இதைத் தாண்டி யாராலும் கூடுதல் சலுகையை அளிக்க முடியாத அளவுக்குச் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது தான் தனிச் சிறப்பு. இப்படி என்ன சலுகை கொடுத்துள்ளது..? வாங்க பார்ப்போம்.

மத்திய அரசின் செமிகண்டக்டர் துறைக்கான 10 பில்லியன் டாலர் மதிப்பிலான மானிய திட்டத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி தளத்தை அமைக்கத் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அரசு தனிப்பட்ட முறையில் 50 சதவீத கூடுதல் மானியத்தை வழங்குவதாகச் செமிகண்டக்டர் கொள்கையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி தளத்தை அமைக்கும் நிறுவனங்களுக்கு, பயிற்சி, ப்ராடெக்ட் டெஸ்டிங், ப்ரோடோடைப்பிங், ஸ்டாம்ப் டூட்டி, மின்சாரம் ஆகியவற்றில் கூடுதல் சலுகை, தள்ளுபடிகளை அளிக்க உள்ளது.
மேலும் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் தமிழர்களைப் பணியில் அமர்த்தினால் முதல் வருடத்திற்கு 30 சதவீதமும், 2வது வருடத்திற்கு 25 சதவீதமும், 3வது வருடத்திற்கு 20 சதவீத payroll reimbursement-க்கு தகுதி அடைவார்கள். இந்த payroll reimbursement தொகை ஒரு மாதத்திற்கு அதிகப்படியாக 20000 பேருக்கு அளிக்கப்படும்.
அதாவது தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் நிறுவனத்தில் நியமிக்கப்படும் 20000 ஊழியர்களுக்கான சம்பளத்தை அரசு திருப்பிச் செலுத்துதல். இந்தச் சலுகை 3 வருடத்திற்கு அளிக்கப்படும்.
மத்திய அரசு அளிக்கும் சலுகையைத் தாண்டி குஜராத் 40 சதவீத மானியத்தைக் குஜராத் அளிக்கும் வேளையில், தமிழ்நாடு அரசு 50 சதவீதம் மானியத்தை CAPEX-ல் அளிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு குஜராத்-ஐ ஓரம்கட்டியுள்ளது.
ஆனால் குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே அமெரிக்காவின் மைக்ரான் தொழிற்சாலை கட்டும் பணிகளைத் துவங்கியுள்ளது. டாடா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்புதிய கொள்கை அறிவிப்பு மூலம் டாடா கூடத் தமிழ்நாட்டுக்கு வரலாம்.
இதேவேளையில் குஜராத் மாநிலத்தின் Dholera Special Investment பகுதியில் செமிகண்டக்டர் ஃபேரிகேஷன்-க்குத் தேவையான கட்டமைப்பு சிறப்பாக உள்ளதும் முதலீட்டாளர்கள் யோசிக்கும் முக்கிய விஷயமாக இருக்கும் எனச் செமிகண்டக்டர் ஆய்வாளர் அருண் மாம்பழி தெரிவித்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டின் கொள்கை வலிமையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஆட்டோமொபைல், ஸ்மார்ட்போன், ஐடி ஹார்டுவேர் ஆகிய 3 துறைக்கும் சிப் மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில், இந்த 3 துறையிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கும் வேளையில் செமிகண்டக்டர் நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு முக்கிய டார்கெட் ஆக மாறும்.
அனைத்தை விடவும் முக்கியமாகத் தமிழ்நாட்டின் திறன் வாய்ந்த பணியாளர்கள், அதிகளவிலான பட்டதாரிகள் என நிரம்பி வழிந்து உள்ளனர். இந்த வசதி வேறு எந்த மாநிலத்திலும் கிடைக்காது என்பதே நிதர்சனமான உண்மை.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications