ராமேஸ்வரம்: தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தளமாக ராமேஸ்வரம் விளங்குகிறது. ராமநாதசாமி கோயில், தனுஷ்கோடி என ஆன்மீக ரீதியாகவும், சுற்றுலா நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கானவர்கள் இங்கே வருகை தருகின்றனர்.
விமான நிலையம்: ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைத்து விமான இணைப்பை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக ராமேஸ்வரத்தில் விமான நிலையம் கட்டப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு மார்ச் மாதம் வெளியிட்டது.இதன் ஒரு பகுதியாக தற்போது விமான நிலையத்தை அமைப்பதற்கான இரண்டு இடங்களை தமிழ்நாடு அரசு கண்டறிந்துள்ளது .

2 இடங்கள் தேர்வு: முன்னதாக தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ ஐந்து இடங்களை தேர்வு செய்து அங்கே விமான நிலையம் அமைக்க முடியுமா என்பது குறித்த ஆய்வினை நடத்தி தமிழ்நாடு அரசிடம் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக இந்த ஐந்து இடங்களில் இருந்து இரண்டு இடங்களில் தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்து இருக்கிறதாம். ஒன்று உச்சிப்புளி அருகே இருக்கக்கூடிய இடம் , மற்றொன்று கீழக்கரை பகுதிக்கு அருகே இருக்கக்கூடிய இடம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நிலம் கையகப்படுத்தல்: முதலில் 700 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை விமான நிலையத்திற்காக அரசு கையகப்படுத்த வேண்டி இருந்ததாம் ஆனால் இந்த இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்று என முடிவு செய்யப்பட்டால் 500 இல் இருந்து 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினாலே போதும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த இரண்டு இடங்களும் விமான நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான இடங்களாக இருந்தாலும் ராமேஸ்வரத்திற்கு இன்னும் அருகிலேயே ஏதேனும் இடம் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசு டிட்கோவிற்கு அறிவுறுத்தி இருக்கிறதாம்.
அடுத்த ஆண்டு அறிவிப்பு: உச்சிப்புளியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு அதற்கு இந்திய கடற்படையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து வழங்கிய பிறகு இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு நடத்தும். இதனை அடுத்து அடுத்த ஆண்டு எந்த இடத்தில் விமான நிலையம் அமைகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிடும்.
ஏன் விமான நிலையம் தேவை: ராமேஸ்வரம் பல்வேறு சுற்றுலா தளங்களும் ஆன்மீக தளங்களும் நிறைந்த ஒரு பகுதியாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கும் தனுஷ்கோடிக்கும் வருகை தருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் ரயில்களில் வருகின்றனர் இல்லை என்றால் மதுரை விமான நிலையத்திற்கு வந்த அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரத்திற்கு பயணம் செய்கின்றனர் . ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் போது சுற்றுலாத்துறை இன்னும் மேம்படும் என்றும் இது பொருளாதார ரீதியாக அந்த மாவட்டத்திற்கு மேலும் வலுக்கூட்டும் என்றும் தமிழ்நாடு அரசு திட்டமிடுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications