தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை தொட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதோடு, மாநிலத்தின் பொருளாதாரத்தை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த சந்தையாக மாற்ற வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சேவை துறையாக இருந்தாலும் சரி, உற்பத்தி துறையாக இருந்தாலும் சரி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முக்கியத் தேர்வாக உள்ளது. உதாரணமாகப் பின்டெக், எலக்ட்ரிக் வாகனம், சோலார் பேனல் போன்ற வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் துறை சார்ந்த நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு முக்கிய இலக்காக உள்ளது.

தமிழ்நாட்டுக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களைச் சென்னையில் மட்டுமே தேக்கிவிடாமல் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முக்கியமான இலக்கில் உள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் தொழிற்துறைக்கான நிலங்களைத் திரட்டி வருகிறது தமிழ்நாடு அரசு.
அடுத்த 5 வருடத்தில் தமிழ்நாட்டில் சுமார் 45,000 ஏக்கர் நிலத்தைத் தொழிற்துறை நிறுவனங்களுக்காகத் திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலத்தில் உற்பத்தி தளங்கள் முதல் ஐடி பார்க் வரையில் பல திட்டங்களைத் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.
இந்த 45,000 ஏக்கர் டார்கெட்டில் சுமார் 22,941 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றுவதில் பல்வேறு கட்டத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசிடம் ஏற்கனவே மிகப்பெரிய அளவிலான நிலம் தொழிற்துறைக்காக வைத்திருக்கும் வேளையில், தற்போது பெரிய நிறுவனங்களை ஈர்க்கும் இலக்குடன் புதிதாக நிலத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு உள்ளது.
சமீபத்தில் தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் முதல் சிப்காட் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் சூலூர் தாலுக்காவில் வரப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு புதிய சிப்காட் பகுதியை உருவாக்க உள்ளது.
வரப்பட்டி கிராமத்தில் சுமார் 373 ஏக்கரில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்த டிபென்ஸ் காரிடார் அமைய உள்ளது. இதில் சுமார் 75 ஏக்கர் நிலம் தனிப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது, மேலும் இந்தச் சிப்காட் பகுதியைத் தமிழ்நாடு அரசின் சிப்காட் மற்றும் TIDCO இணைந்து சுமார் 293 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டமைக்க உள்ளது.
தமிழ்நாடு அரசு முதலீட்டாளர் மாநாடு முடிந்த கையோடு பெரம்பலூரில் இருக்கும் இறையூர் சிப்காட், ராணிப்பேட்டையில் இருக்கும் பனப்பாக்கம் சிப்காட், ஓசூரில் உள்ள சூளகிரி சிப்காட் ஆகியவற்றின் அடிப்படை கட்டமைப்புக்கான பணிகளைச் செய்யச் டெண்டர் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications