தமிழ்நாடு அரசு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ச்சியை பரவலாக்குவதில் மிக தீவிரமாக இருந்து வருகிறது. சென்னையில் மட்டுமே வளர்ச்சி, தொழில் மேம்பாடு ,பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவை நின்று விடக்கூடாது அனைத்து மாவட்டங்களுக்கும் இது பகிரப்பட வேண்டும் என்பதற்காகவே ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது .
அண்மையில் தான் தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்டத்திற்கு பிரத்தியேகமாக ஒரு முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது. இதன் அடுத்த கட்டமாக ஓசூர் பகுதியை மையமாக கொண்டு தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது . நாளை மறுதினம் ஓசூரில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு ஓசூர் செல்கிறார் ஓசூர் தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையத்திற்கு வருகை தரக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்து கூறப்பட்டு ஓசூர் ஆனந்த் கிராண்டு பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார். இந்த மாநாட்டினை தொடர்ந்து பல்வேறு அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார் .
கடந்த வாரம் தான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டார். ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வந்தார் இதன் மூலம் சுமார் 17000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது .
தற்போது அடுத்த கட்டமாக ஓசூரில் நாளை மறுதினம் முதலீட்டாளர் மாநாட்டை நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு தொழில் நகரமாக ஓசூர் திகழ்ந்து வருகிறது. ஏற்கனவே ஓசூரில் டாடா, டிவிஎஸ், ஓலா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய மின்சார வாகனம் மற்றும் ஸ்மார்ட் போன் உற்பத்தி ஆலைகள் மற்றும் வாகன உற்பத்தி ஆலைகளை செயல்படுத்தி வருகின்றன .
இந்த நிலையில் ஓசூரை மையமாக வைத்து முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுவது என்பது அந்த நகரின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் ஊக்கம் தருவதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கடந்த மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் 41 தொழில் நிறுவனங்களோடு 32,500 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசு கையெழுத்து விட்டது. இந்த தொழில் முதலீடுகள் மூலமாக சுமார் 50,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அறிவிப்பையும் அரசு வெளியிட்டிருந்தது. அடுத்த கட்டமாக ஓசூரில் நடத்தப்படும் இந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக இருக்கும் என்றும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.
More From GoodReturns

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications