இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கு இணையாக ஹைட்ரஜென் வாயுவை எரிபொருளாக பயன்படுத்தும் திட்டம் நாளுக்கு நாள் பெரியதாகி வரும் வேளையில் ஹைட்ரஜென் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தான் அடுத்த 15 முதல் 20 வருடத்தில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயம் செய்யும் சக்தியை பெறும்.
உதாரணமாக தற்போது வளைகுடா நாடுகள் எப்படி தங்களுடைய கச்சா எண்ணெய் வளத்தை வைத்து சர்வதேச பொருளாதாரத்தில் பெரிய அளவிலான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. சொல்லப்போனால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 10 டாலர் உயர்ந்தால் வளரும் நாடுகள் பட்டியலில் இருக்கும் பல நாடுகளில் விலைவாசி உயர்வு விண்ணை முட்டும்.

கிட்டத்தட்ட இதே ஆதிக்கத்தை ஹைட்ரஜென் வாயு அடுத்த 20 - 30 வருடத்தில் அடையும் அளவுக்கு சக்திவாய்ந்தது. இந்த நிலையில் ஹைட்ரஜென் வாயுவை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வதற்கும், தமிழ்நாட்டில் இருந்து உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய 3 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளது.
Acme, Petronas மற்றும் Hygenco ஆகிய 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பசுமை ஹைட்ரஜென் அதாவது கிரீன் ஹைட்ரஜென் உற்பத்தி செய்வதற்கான தளத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக அடுத்த 6 மாதத்தில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இந்த நிறுவனங்கள் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீன் ஹைட்ரஜென் உற்பத்தி துறைக்காக அடுத்த 2 மாதத்தில் தமிழ்நாடு அரசு தனிக் கொள்கையை வெளியிட உள்ளதாக தெரிவித்த தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, தமிழ்நாடு வரும் காலத்தில் குளோபல் கிரீன் ஹைட்ரஜென் ஹப் ஆக மாற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
மத்திய அரசு இந்தியாவில் அடுத்த சில வருடத்தில் இந்தியாவில் மொத்தம் 5 MMT அளவிலான கிரீன் ஹைட்ரஜென்-ஐ உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், தமிழ்நாடு மட்டும் Acme, Petronas மற்றும் Hygenco ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் சுமார் 2 MMT உற்பத்திக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இத்தொழிற்சாலைக்கான பணிகள் அடுத்த 8-9 மாதத்தில் துவங்கும், இதில் சில பணிகள், சில நிறுவனத்தின் பணிகள் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் electrolyser manufacturing-க்கு சிறப்பாந பேகேஜ் அளிக்க உள்ளோம், இதோடு இப்பிரிவில் இருக்கும் சவால்களை ஆய்வு செய்ய Guidance Tamil Nadu மற்றும் பிரிட்டன் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications