கோவை: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோயம்புத்தூரில் உள்ள நீலாம்பூர் பைபாஸ் சாலையை எல்&டி நிறுவனத்திடம் இருந்து பெற்று தமிழக அரசிடம் ஒப்படைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோயம்புத்தூர் மாவட்டம் நீலாம்பூர் பைபாஸ் சாலை 28 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த சாலையின் மெயின்டனன்ஸ் பொறுப்பு தற்போது எல்&டி நிறுவனத்தின் வசம் இருக்கிறது.
எல்&டி நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவடைவதற்கு இன்னும் ஐந்து ஆண்டு காலம் இருக்கிறது. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு அரசின் தேசிய நெடுஞ்சாலை பிரிவிடம் இதனை ஒப்படைத்து சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எல்&டி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நிறுவனத்திற்கு தேவையான இழப்பீட்டுத் தொகையை வழங்குவது குறித்தும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பேசி வருவதாக தெரிகிறது.
இந்த குறுகிய இரண்டு வழி பைபாஸ் சாலை, சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இந்த சாலையில் தான் தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச விபத்துகள் நடைபெறுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் இங்கு நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துகளில் 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தமிழ்நாடு மூத்த அதிகாரி ஒருவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள தகவலில் எல்&டி நிறுவனத்திடம் ஒப்பந்தத்தை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான பேச்சு வார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் மாநில அரசு அந்த சாலையை கைப்பற்றும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையும் அரசே வழங்கும் என தெரிவித்துள்ளார். எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு கையில் எடுத்த பிறகு தற்போது இரண்டு வழியாக இருக்கக்கூடிய இந்த சாலை நான்கு வழி சாலை ஆக மாற்றப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்காக 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் எல்&டி நிறுவனம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் இந்த சாலையை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர் என உறுதிப்படுத்தியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலை 544 சேலத்திலிருந்து நீலாம்பூர் வரை ஆறு வழி சாலையாக இருக்கிறது, அடுத்ததாக வாளையார் முதல் மதுக்கரை வரை நான்கு வழி சாலை ஆகவும் மீதமுள்ள 340 கிலோமீட்டர் தொலைவிற்கு ஆறு வழி சாலை ஆகவும் இருக்கிறது. இதில் நீலாம்பூர் பைபாஸ் சாலையை பராமரிப்பதற்கான 30 ஆண்டுகள் ஒப்பந்தத்தை எல்&டி நிறுவனம் கடந்த 1999 ஆம் ஆண்டு எடுத்து கொண்டது.
மக்கள் தொகை அதிகரிப்பு வாகனங்கள் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவை காரணமாக இந்த சாலையில் அதிக விபத்து நேர்வதாகவும் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications