இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான SEZ எனப்படும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைக் கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பல மாநிலங்கள் ஏக்கச்சகமான SEZ அறிவித்திருந்தாலும், அவை பெரும்பாலானவை செயல்பாட்டில் இல்லை. ஆனால் செயல்பாட்டில் இருக்கும் SEZ எண்ணிக்கை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏழு புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவ தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் தொலைநோக்குப் பார்வையில் இந்த 7 SEZ, புதிதாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலக் நெட்வொர்க்-ல் புதிதாகச் சேர்க்கப்படவுள்ள ஏழு பகுதிகளின் லிஸ்ட் இதுதான். திருவள்ளூர் அருகில் இருக்கும் பொன்னேரி மற்றும் ராணிப்பேட்டையில் தலா இரண்டு உற்பத்தி சார்ந்த மண்டலங்களும், பனாப்பாக்கம், உளுந்தூர்பேட்டை மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் தலா ஒரு SEZ பகுதியும் அடுத்த 3 வருடத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் சென்னையில் எல்&டி இன்ஃபோடெக் நிறுவனத்திற்காக ஒரு புதிய வசதியும் நிறுவப்படவுள்ளது. இது ஐடி துறைக்காக நிறுவப்படும் SEZ. இந்த ஏழு புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் அடுத்த மூன்று நிதியாண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சுமார் 800 ஏக்கர் பரப்பளவிலும், மணப்பாக்கத்தில் அமையவுள்ள எல்&டி இன்ஃபோடெக் வசதி மட்டும் 9,50,011 சதுர அடி பரப்பளவிலும் SEZ உருவாக்கப்படுகிறது. இந்த முறையும் தமிழ்நாடு அரசு உற்பத்தி மற்றும் சேவை துறை கலவையில் SEZ உருவாக்க உள்ளது.
இந்த காம்பினேஷன் முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்பு உருவாக்குவதையும் வேகப்படுத்தும். இதேபோல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் பன்முகப்படுத்தப்பட்ட அணுகுமுறையை தமிழ்நாடு கையில் எடுத்துள்ளது பாராட்டத்தக்கது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த விண்வெளி கொள்கையிலும் உற்பத்தி, சேவை துறை, ஸ்டார்ட்அப், பெரிய நிறுவனங்கள் என அனைத்து பிரிவினரையும் ஈர்க்கும் வகையில் மானியம் மற்றும் கொள்கை அறிவிப்புகள் வெளியானது.
MEPZ சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் மண்டல மேம்பாட்டு ஆணையர் அலெக்ஸ் பால் மேனன் சமீபத்தில் பத்திரிக்கைக்கு அளிக்க பேட்டியில் MEPZ TAP (தமிழ்நாடு, அந்தமான் மற்றும் புதுச்சேரி) பிராந்தியத்தில் இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான மாநிலத்தின் உத்திகளின் ஒரு பகுதி தான் இந்த 7 SEZ மற்றும் ஒரு ஐடி பார்க் என தெரிவித்தார்.
மேலும் 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டில் இருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் இருந்து ஏற்றுமதி மதிப்பை அதிகரிப்பதும், தமிழ்நாடு முழுவதும் சிறப்பான வணிகச் சூழலை உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
2025 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாடு ஏற்கனவே 49 செயல்பாட்டு SEZ கொண்டுள்ளது, இது நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாகும். இந்த SEZ பகுதியில் மொத்தம் 1,234 நிறுவனங்கள் உள்ளது, இதில் 665 உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் 569 ஐடி நிறுவனங்கள் உள்ளது. இதேபோல் இந்த SEZ பகுதியில் மட்டும் சுமார் 6.3 லட்சம் பேர் பணியாற்ரி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் தற்போதைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பொருளாதார தாக்கம் அவற்றின் வலுவான ஏற்றுமதி செயல்திறன் மூலம் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.
2024-25 நிதியாண்டில் டிசம்பர் 2024 வரை இந்த SEZ மண்டலங்களின் நிகர ஏற்றுமதி 1,39,739 கோடி ரூபாயை எட்டியுள்ளது, மேலும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் இந்த அளவு 1,86,319 கோடி ரூபாயை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் 49 சிறப்பு பொருளாதார மண்டத்தில் ஆட்டோமொபைல், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், காலணி, ரசாயனப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற முக்கிய தொழில்களின் இருப்பு பலதரப்பட்ட முதலீடுகளை ஈர்ப்பதற்கு உதவுகிறது.
மேலும், சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி போன்ற பெரிய துறைமுகங்களுக்கு அருகாமையில் சாலை மற்றும் ரயில் வலையமைப்பும் உருவாக்கு ஏற்றுமதி அடிப்படையிலான நிறுவனங்களை தனிப்பட்ட முறையில் ஈர்க்கும் முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications