15 நாட்களில் புதிய‌ ரேஷன்‌ கார்டு.. சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவிலேயே பொது விநியோக சேவையை மக்களுக்கு மிகவும் சிறப்பாக அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு மிக முன்னணி மாநிலமாக இருக்கும் நிலையில், தமிழக அரசு இப்பிரிவு சேவையைப் பெரிய அளவில் மேம்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.

 

இதன் வாயிலாகப் புதிய ரேஷன் கார்டு பெறுபவர்களுக்குச் சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் ஐடி ரெய்டு .. 25 இடங்களில் அதிரடி சோதனை.!

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

தமிழகச் சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு‌ 2021ஆம்‌ ஆண்டு மே 7ம்‌ தேதி பொறுப்பேற்றவுடன்‌, தேக்கம் அடைந்த பணிகளை அனைத்து துறையிலும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது

15,74,543 விண்ணப்பங்கள்‌

15,74,543 விண்ணப்பங்கள்‌

இதன் பிடி 2021 மே மாதம்‌ முதல்‌ கடந்த மார்ச் 14ம்‌ தேதி வரை 10 மாதங்களில்‌ குடும்ப அட்டை பெறுவதற்காகத் தமிழ்நாடு முழுவதும் சுமார் 15,74,543 விண்ணப்பங்கள்‌ சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

10,92,064 பேருக்கு புதிய குடும்ப அட்டை
 

10,92,064 பேருக்கு புதிய குடும்ப அட்டை

இப்படிப் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து பரிசீலிக்கப்பட்டுப் பின்னர்‌ தகுதியுடைய விண்ணப்பதாரர்களான‌ 10,92,064 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள்‌ அதாவது ரேஷன் கார்டு வழங்கி சாதனை படைத்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

15 நாள் மட்டுமே

15 நாள் மட்டுமே

மேலும் இனி வரும் காலத்தில் குடும்ப அட்டைக்காக யார்‌ விண்ணப்பித்தாலும், கோரிக்கை உடனடியாக ஏற்றுத் தகுதியுள்ள நபருக்கு அடுத்த 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்‌கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் தெரிவித்துள்ளார்.‌

ரேஷன் கடைகள்

ரேஷன் கடைகள்

மேலும் ரேஷன் கடைகளில் தற்போது பொருட்களை வாங்குவதில் பல பிரச்சனைகள் உள்ளது, குறிப்பாகக் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை வைத்துச் சரியாக இருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது.

விதிமுறை தளர்வு

விதிமுறை தளர்வு

விரல்‌ரேகை தேய்மானம்‌ காரணமாக விரல் ரேகை சரிபார்ப்பு முறையைப் பல இடத்தில் செயல்படுத்த முடியாத நிலையில் குடும்பத்தில் 5 வயதுக்கு மேற்‌பட்டோர்‌ யாராக இருந்தாலும்‌ அவர்கள்‌ நியாய விலை கடையில் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்‌. இப்புதிய வசதிகளும் தற்போது தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு உள்ளது எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tamilnadu govt will issue New ration card within 15 days of submitting application

Tamilnadu govt will issue New ration card within 15 days of submitting application 15 நாட்களில் புதிய‌ ரேஷன்‌ கார்டு.. சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!
Story first published: Wednesday, March 23, 2022, 12:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X