இந்தியாவில் சுற்றுசூழல் பாதுகாக்கவும், எரிபொருள் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்தைக் கொண்ட வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 15 வருடங்களுக்கும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து முழுமையாக நீக்க உள்ளது மத்திய அரசு.
மேலும் பழைய வாகனங்களை அழிக்க விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் புதிய வாகனங்களை வாங்கும் போது தள்ளுபடி அளிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. அரசின் இந்த முடிவிற்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் 15 வருடங்களுக்கும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கும் வாகன எண்ணிக்கை குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி
மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி சமர்ப்பித்த அறிக்கையின் படி இந்தியாவில் 15 வருடங்களுக்கு அதிகமாகப் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடி. இதில் 50 சதவீதம் வாகனங்கள் 20 வருடங்களுக்கு அதிகமானவை எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்தின் கீழ் சுமார் 4 கோடி வாகனங்கள் தகுதி பெற்றுள்ளது.
கர்நாடகா முதல் இடம்
இதில் அதிகப்படியாகக் கர்நாடகாவில் மட்டும் சுமார் 70.1 லட்சம் வாகனங்கள் 15 வருடத்திற்கும் பழமையானது. கர்நாடகாவைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 56.5 லட்சம் வாகனங்கள், டெல்லியில் சுமார் 50 லட்சம் வாகனங்கள் 15 வருடத்திற்கும் பழமையானதாகும்.
தமிழ்நாடு முதல் இடம்
டாப் 5 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 5வது இடத்தில் உள்ளது 20 வருடத்திற்கு மேல் 15 லட்ச வாகனங்களும், 15 முதல் 20 வருடத்திற்குள் இருக்கும் வாகனங்கள் எண்ணிக்கை 18 லட்சம் என மொத்தம் 33 லட்ச வாகனங்கள் தமிழ்நாட்டில் வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ளது.
4 கோடி வாகனங்கள்
வாகன் 4 மத்திய வாகன தகவல்கள் கீழ் உள்ள தகவல்கள் படி கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி, கேரளா, தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் சுமார் 4 கோடி வாகனங்கள் 15 வருடத்திற்கு மேலாகியும் பயன்பாட்டில் உள்ளது என நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications