893 ஒப்பந்தங்கள், ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள், 31 லட்சம் வேலைவாய்ப்புகள் – சாதிக்கும் தமிழ்நாடு..!

சென்னை: இந்தியாவிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக தமிழ்நாடு இருக்கிறது. குறிப்பாக அதிக சம்பளம் வழங்கும் வேலைகளை உருவாக்குவதில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது.

கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழ்நாடு அரசு 10,07,974 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் 31 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்நாட்டின் முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் தொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

893 ஒப்பந்தங்கள், ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள், 31 லட்சம் வேலைவாய்ப்புகள் – சாதிக்கும் தமிழ்நாடு..!

இந்தியாவில் அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாகி வரக்கூடிய ஒரு மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவது தரவுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள், திறமையான ஊழியர்கள் மற்றும் அரசு எடுத்து வரும் முயற்சிகள் ஆகிய அனைத்துக்கும் கிடைத்த வெற்றி தான் இது என சொல்லப்படுகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மட்டுமில்லாமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்னணு சாதனங்கள், நிதி மற்றும் உற்பத்தி துறை என பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்பட்டு வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

சென்னையில் மட்டும் 2030ஆம் ஆண்டுக்குள் அதிக சம்பளத்தில் வேலை செய்யும் தொழில் நிபுணர்களின் எண்ணிக்கை 3,70,000 ஆக அதிகரிக்கும் என அண்மையில் வெளியான ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2024 - 25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில திட்ட கமிஷனின் பொருளாதார ஆய்வு அறிக்கை தமிழ்நாட்டில் வேலை செய்யக்கூடிய வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் திறமை மிகுந்த மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற்ற ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இது தமிழ்நாட்டின் நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. சென்னையை பொருத்தவரை தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் நகரமாகவும் இருக்கிறது.

கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டில் முதல் 9 மாதங்கள் வரையிலான காலகட்டத்தில் சென்னையில் கார்ப்பரேட் அலுவலக தளங்களின் பரப்பளவு 14 லட்சம் சதுர அடியில் இருந்து 23 லட்சம் சதுர அடிகளாக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் திறமைமிகு பணியாளர்கள் அதிக அளவில் கிடைப்பதும் தொழில் தொடங்க சாதகமான கொள்கைகள் இருப்பதுமே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் திறன் மேம்பாட்டு கிளைகள் அதிக அளவில் சென்னையில்தான் நிறுவப்படுகின்றன. இவற்றில் 33 சதவீதம் பொறியியல் மற்றும் உற்பத்தி துறையை சார்ந்தவையாக இருக்கின்றன. 27% வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு துறைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ,13 சதவீதம் தொழில்நுட்ப நிறுவனங்களாகவும், 8 சதவீதம் அறிவியல் ஆய்வு சம்பந்தப்பட்ட நிறுவனங்களாகவும் இருக்கின்றன . வாகன உற்பத்தி, செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளிலும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் தங்களின் ஜிசிசி மையங்களை சென்னையில் அமைக்கின்றன.

சென்னை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய நகரங்களும் உற்பத்தி, ஆய்வு மற்றும் மேம்பாடு, பொறியியல் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை ஈர்த்து அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நகரங்களாக மாறி இருக்கின்றன. குறிப்பாக கோயம்புத்தூர், திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் செயற்கை நுண்ணறிவு துறை, டேட்டா சயின்ஸ் மற்றும் மென்பொருள் மேம்பாடு துறைகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன என அந்த கட்டுரை குறிப்பிடுகிறது.

iVP Semi நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜா மாணிக்கம் இந்தியா மின்னணு சாதன உற்பத்தி மையமாக மாறிவரும் நிலையில் அதற்கு தலைமை வகிக்கக்கூடிய அனைத்து தகுதிகளும் தமிழ்நாட்டிற்கு இருக்கிறது என தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் அதிக ஜிசிசி மையங்கள் வருகை தருவதன் மூலம் அதிக சம்பளம் கொண்ட வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இதனை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு சம்பளத்தில் மானியம் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது.

இதன்படி மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கக்கூடிய வேலைவாய்ப்புகளுக்கு முதல் ஆண்டின் 30 சதவீத சம்பளத் தொகையையும் ,இரண்டாவது ஆண்டில் 20 சதவீத சம்பளத் தொகையையும், மூன்றாவது ஆண்டில் 10 சதவீத சம்பள தொகையையும் அரசே மானியமாக வழங்கி விடுகிறது. எனவே பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தேடி வந்து தமிழ்நாட்டில் தங்களின் திறன் கிளைகளை அமைக்கின்றன. தமிழ்நாட்டில் தற்போது 250க்கும் அதிகமான ஜிசிசி மையங்கள் அமைந்திருப்பதே இதற்கு சாட்சி.

கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தமிழ்நாடு அரசு 893 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் 10,07, 974 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 31 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாடு அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வு அறிக்கை மாநிலம் தற்போது செயற்கை நுண்ணறிவு ,ரோபோடிக்ஸ் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையை இந்த துறைகள் மாற்றி அமைத்துள்ளன என்றும் குறிப்பிடுகிறது.

இதற்கிடையே தமிழ்நாடு அரசு நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு துறை சார்ந்த பயிற்சி அளிப்பது போன்ற பல்வேறு புதிய முயற்சிகளையும் கட்டமைப்புகளையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது . இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பொறியியல் மற்றும் மேலாண்மை பிரிவுகளில் பட்டதாரிகள் உருவாக்கப்படுவது தமிழ்நாட்டில் தான் என சொல்லப்படுகிறது . இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு ,டேட்டா சயின்ஸ் மற்றும் டீப் டெக் உள்ளிட்ட பிரிவுகளில் தமிழ்நாடு அரசு இன்னும் கவனம் செலுத்தினால் இந்தியாவிலேயே அசைக்க முடியாத மாநிலமாக மாறும் என தொழில் துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு வளர்ச்சி என்பது குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் சுருங்கி விடக் கூடாது என்பதற்காகவே அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட்கள், டைடல் பூங்காக்கள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட டாடா மோட்டார்ஸின் உற்பத்தி ஆலை, தூத்துக்குடியில் அமைக்கப்பட இருக்கும் வின்ஃபாஸ்ட் வாகன உற்பத்தி ஆலை உள்ளிட்டவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் , அதற்கு ஏற்ப திறமைமிகு மாணவர்களை உருவாக்க வேண்டும், உற்பத்தியிலும் ஆய்விலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அது பலன் தர தொடங்கி இருப்பதாகவும் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+