சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024-ல் பல்வேறு தொழில்துறை திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த வருடத்தின் துவக்கத்தில் தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்ட ரூ.51,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், ரூ.17,616 கோடி மதிப்பிலான திட்டங்களும் தொடங்கி வைக்கப்பட்டன. இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதில் முக்கியமான சில திட்டங்களை பற்றி இப்போது பார்ப்போம்.

முதலமைச்சர் ஸ்டாலின் காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ESJAY Pharma என்னும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 1500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
இதை தொடர்ந்து ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ENEX டெக்ஸ்டைல் மில்ஸ் (ராம்ராஜ் காட்டன்) உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 7000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் WEG இண்டஸ்ட்ரீஸ் விண்ட் டர்பைன் மற்றும் LV மோட்டார் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிறுவனம் ரூ.650 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 650 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
ஈரோடு மாவட்டத்தில் மில்கி மிஸ்ட் பால் பொருள் நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 3400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் சுந்தரம் பாஸ்ட்னர்கள் உற்பத்தி நிறுவனங்களைத் தொடங்கி வைத்தார். இந்த நிறுவனம் ரூ.1,411 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 1577 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
முதலமைச்சர் ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜுரோஜின் டெவலப்பர்ஸ் ( Jurojin Developers - ஹவுஸ் ஆஃப் ஹிரானந்தனி) தொழில்துறை பூங்கா-வை தொடங்கி வைத்தார். மேலும், சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய தொழில்துறை பூங்கா அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் ரெனோ-நிசான் ஆட்டோமொபைல் டிசைன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் மையத்தின் விரிவாக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் வணிக மையத்தைத் தொடங்கி வைத்தார். இது 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
சென்னையில் எல்&டி இன்னோவேஷன் கேம்பஸ் ஐடி பார்க்-ஐ தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த ஐடி பூங்கா ரூ.3,500 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 40,000 பேர் பணியாற்ற இடமளிக்கும்.
முதலமைச்சர் ஸ்டாலின் சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூரில் டிவிஎஸ் இந்தியன் (லுகாஸ் டிவிஎஸ்) EV பேட்டரி பேக் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிறுவனம் ரூ.2,850 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 800 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதர்சன் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் முக.ஸ்டாலின். இந்த நிறுவனம் ரூ.2,600 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 2800 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ரத்த அழுத்தக் கண்காணிப்பு செய்யும் கருவிகளின் உற்பத்தி நிறுவனத்தின் சோதனை ஆலையைத் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின். இந்த ஆலை ரூ.128 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 88 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
முதல்வர் முக ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் தலைமையிலான மேம்பட்ட உற்பத்தி சேவை வழங்குநரான ஹை-பி நிறுவனத்தின் மெக்காட்ரானிக் உதிரிபாகங்கள் மற்றும் மாடியூல்களை உற்பத்தி நிறுவனத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இந்த ஆலை ரூ.312 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 700 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
சுந்தரம் பாஸ்ட்னர்கள் நிறுவனம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பாஸ்டனர் உற்பத்தி நிறுவனங்களைத் தொடங்கி வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின். இந்த நிறுவனங்கள் மொத்தம் ரூ.1,411 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 1577 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
முதல்வர் முக ஸ்டாலின் இன்று கேப்ளின்பாயிண்ட் நிறுவனத்தின் ஆன்காலஜி - OSD மற்றும் இன்ஜெக்டபிள்ஸ் தொழிற்சாலை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். மேலும், பொது மருந்துகள் தயாரிப்பு நிறுவனத்திற்கான அடிக்கல் நாட்டினார். இதில் ரூ.700 கோடி முதலீடு செய்யப்பட்டு, 1500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
முதல்வர் முக ஸ்டாலின் கருட் விண்ட் (Gurut Wind) நிறுவனத்தின் கலப்பு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இந்த ஆலை ரூ.300 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 300 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
ஹிப்ரோ ஹெல்த்கேர் ( Hibrow Healthcare) நிறுவனத்தின் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இந்த ஆலை ரூ.200 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 300 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் பிளேட்டிங் நிறுவனத்தைத் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இந்த ஆலை ரூ.200 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டு, 200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications