ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்துடன், புதிய மாடல் போன்களையும் இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 5 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் ஏற்றுமதி மதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்த வருடத்தின் இறுதியில் அறிமுகம் செய்ய உள்ள ஐபோன் 15 சீரியஸ் போன்களை அதிகளவில் இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்த எந்த மாடல் போன்களை எவ்வளவு போன்களை தயாரிக்க உள்ளது என்ற தரவுகளை டிரென்ட் போர்ட்ஸ் என்னும் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
டிரென்ட் போர்ட்ஸ் தரவுகள் படி Iphone 15 - பாக்ஸ்கான் 70 சதவீதமும், Luxshare 25 சதவீதமும், டாடா குரூப் 5 சதவீதமும் தயாரிக்க உள்ளது.
Iphone 15 Plus - luxshare 60 சதவீதமும், பெகாட்ரன் 35 சதவீதமும், டாடா குரூப் 5 சதவீதமும் தயாரிக்க உள்ளது.
Iphone 15 Pro - பாக்ஸ்கான் 70 சதவீதமும், பெகாட்ரன் 30 சதவீதமும் தயாரிக்க உள்ளது.
Iphone 15 Pro Max - பாக்ஸ்கான் 70 சதவீதமும், பெகாட்ரன் 25 சதவீதமும் தயாரிக்க உள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பாக்ஸ்கான் இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தி தளத்தை வைத்துள்ளது சென்னையில் தான், இதேபோல் சீனாவின் Luxshare காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகில் சுங்குவார்சத்திரம் பகுதியில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைத்தது.
டாடா குரூப் ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை வைத்து ஏற்கனவே ஐபோன்-க்கான அசம்பிளி செய்து வருகிறது. இந்தியாவில் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கூட்டணியான பாக்ஸ்கான், பெகாட்ரன், விஸ்திரான் போன்ற நிறுவனங்கள் மட்டுமே ஐபோன்-ஐ முழுமையாக தயாரிக்கிறது. டாடா ஐபோனின் ஒரு பகுதியை மட்டுமே தயாரிக்கிறது.

தற்போது ஐபோன் 15 சீரியஸ் போன்களை தயாரிக்கும் நிறுவனங்களில் பெகாட்ரன் தவிர அனைத்துமே தமிழ்நாட்டில் தான் உள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் பல காரணிகளை கணக்கிட்டு தமிழ்நாட்டை டார்கெட் செய்து ஐபோன்-ஐ தயாரிக்க உள்ளது.
இதன் மூலம் ஆப்பிள்-க்கு இனி வரும் காலத்தில் தமிழ்நாட்டை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலை இருந்தாலும், பாக்ஸ்கான் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைக்கும் புதிய தொழிற்சாலை மூலம் ஐபோன் உற்பத்தியில் தமிழ்நாட்டின் ஆதிக்கத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்கை பறிக்கலாம்..
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications