சமீபகாலமாக தமிழகம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பல்வேறு முதலீடுகளையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக ஐடி துறையில் வளர்ச்சி ஆனது கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக தொழில்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகின்றன. எனவே இந்த முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. இந்த நிலையில், தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அது எதில் தெரியுமா?
ஆம், நாட்டிலேயே அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் 2023-24 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வந்த குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை விட தமிழ்நாடு சிறு, குறு நடுத்தர தொழில்களால் படித்த இளைஞர்களுக்கு தமிழ்நாடு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை தாண்டி தமிழ்நாட்டில் மட்டும் 39,699 சிறு, குறு தொழில்கள் உள்ள நிலையில், அதன் மூலம் 4 லட்சத்து 81 ஆயிரத்து 807 தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தமிழ்நாடு 8 லட்சத்து 42 ஆயிரத்து 720 மனித உழைப்பு நாட்களை கொண்டு ஒட்டுமொத்த அளவில் நாட்டிலேயே முதலிடத்தை பிடித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, சராசரியாக தமிழ்நாட்டில் ஒரு தொழிலாளிக்கு 1.75 மனித உழைப்பு நாட்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மகாராஷ்டிரா ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 1.13 மனித உழைப்பு நாள்களுக்கும். குஜராத் ஒரு தொழிலாளிக்கு சராசரியாக 1.37 மனித உழைப்பு நாள்களுக்கும் மட்டுமே வேலை வாய்ப்புகளை அளிப்பதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயத்திலிருந்து மாறிய பெரும்பாலான தொழிலாளர்களை சேவைத் துறை இழுத்துள்ளது. என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020-21 தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், கட்டுமானம், சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகிய அனைத்தும் வேலைவாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தமிழ்நாட்டு மக்கள் வளர்ச்சிக்காகவும், படித்த இளைஞர்கள் நலனுக்காகவும் எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல், பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களுக்கு நன்மை அளிக்கும் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வருகிறது. இதனால் தொழில்துறையில் சிறந்து விளங்குகிறது. எனவேதான் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications