பல வருட கடின உழைப்புக்குப் பிறகு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் வெற்றியையும் அதிர்ஷ்டத்தையும் அடைய முடியும். மகேஷ் குமார் நடராஜன் என்ற இந்திய திட்ட மேலாளர் வெள்ளிக்கிழமை புதிய ரேஃபிள் என்ற மாபெரும் லாட்டரி தொகை கொண்ட டிராவில் வெற்றி பெற்றார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் விற்கப்படும் இந்த லாட்டரி இதுவரையில் அந்த நாட்டவர் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ள நிலையில் முதல் முறையாக வெளிநாட்டவர் அதவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இந்தப் பரிசை வென்றுள்ளார்.

மகேஷ் குமார் நடராஜன் வெற்றியின் மூலம் அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதத்திற்கும் தலா 5.6 லட்சம் ரூபாய் ( 25,000 திர்ஹாம்) அதிகமான வருமானத்தை பெற உள்ளார். இதன் மூலம் அவரது நிதி நிலைமையை பெரிய அளவில் மேம்படும்.
மகேஷ் குமார் நடராஜன் தமிழ்நாடு, ஆம்பூரைச் சேர்ந்த திட்ட மேலாளர் ஆவார். தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், மகேஷ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்றார். பின்னர் அண்ணாமலை கல்லூரியில் பிபிஏ பட்டம் பெற்றார்.
நடராஜன் தற்போது ஜெர்மன் MNC நிறுவனமான சீமென்ஸ் நிறுவனத்தில் பராமரிப்பு திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார் என அவரது LinkedIn சுயவிவரம் தெரிவிக்கிறது. நடராஜன் தனது வாழ்நாளின் பெரும்பகுதி தமிழகத்தின் ஆம்பூரில் வாழ்ந்தவர்.
ஃபாஸ்ட் 5 டிராவில் முதல் பரிசு ஜூலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முகமது அடில் கானுக்கு வழங்கப்பட்டது. தற்போது மகேஷ் குமார் நடராஜன் வெற்றி பெற்றுள்ள தொகையை வைத்து தனது சமூகத்தில் வசதி குறைந்தவர்களுக்கு உதவ திட்டமிட்டு உள்ளார்.
இதோடு அவரது குடும்பத்திற்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்காக தனது மகள்களின் கல்விக்காக பணத்தை செலவிட விரும்புவதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications