மினி டைடல் பார்க்.. அமைச்சர் TRB ராஜா-வின் அசத்தலான பதிவு.. மக்கள் செம ஹேப்பி..!!

தமிழ்நாட்டு மக்கள் பல மாதங்களாக காத்திருந்த அந்த ஒரு நாள் தான் இன்று, நாட்டின் பெரு நகரங்கள் அனைத்தும் ஐடி துறையில் வேகமாக வளர்ந்தாலும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் ஐடித்துறையின் வளர்ச்சி மிகவும் மந்தமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சிறு நகரங்களில் சிறு டைடல் பார்குகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்து, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.

மினி டைடல் பார்க்.. அமைச்சர்  TRB ராஜா-வின் அசத்தலான பதிவு.. மக்கள் செம ஹேப்பி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி கிராமத்திலும், சேலம் மாவட்டத்தில் கருப்பூர் கிராமத்தில் இப்புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. இந்த இரு டைடல் பார்க் திறக்கப்பட்டதை குறித்து தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா டிவிட்டரில் முக்கியமான பதிவை செய்துள்ளார்.

டிஆர்பி ராஜா டிவிட்டர் பதிவில் திராவிட நாயகன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பரவலாகப்பட்ட வளர்ச்சி என்ற நோக்கத்திற்கு இன்று மற்றுமொரு பொன் நாள்! குறிப்பாக தஞ்சாவூர் மற்றும் சேலம் மக்களுக்கு அற்புதமான நாள்! என தெரிவித்தார்.

மேலும் தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் மினி டைடல் பூங்காக்களைத் தொடங்கி, உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை இந்த நகரங்களுக்குக் கொண்டுவந்திருக்கிறார், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திராவிட நாயகன் அவர்கள். தஞ்சாவூர் தற்போது தனது முதல் முக்கிய தகவல் தொழில்நுட்ப வசதியைப் பெற்றுள்ளதற்கு டெல்டா பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, மிகவும் பெருமையடைகிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, இத்திட்டத்தை 15 மாதங்களிலேயே நிறைவு செய்துள்ளது. டைடல் பார்க்-களின் தேவை மிகுந்திருப்பதால், நம் மதிப்புக்குரிய முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று, விரைவில் இரண்டாம் கட்டப் பணிகளை தொடங்கும் வாய்ப்புள்ளது.

சேலம் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுக்கு அதிக தகவல் தொழில்நுட்பத் தொழில் உள்கட்டமைப்பைக் கொண்டுவர வேண்டும் என்ற நம் முதலமைச்சரின் கனவு, இப்போது Salem Tidel Neo மூலம் நனவாகியுள்ளது. மேலும், விரைவில் வரவிருக்கும் டெக்ஸ் பார்க் சேலம், நெசவுத் துறையில் பெரிய அளவில் ஊக்கமளிக்கும்.

இந்த மினி TIDEL பூங்காக்கள், புதிய பகுதிகளிலும் 2 மற்றும் 3ஆம் கட்ட நகரங்களிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சான்றாகும், இதனால் நம் மாநிலத்தின் திறமை மிக்க இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சொந்த ஊர்களிலயே தொடர முடியும்.

இன்னும் பல Mini TIDEL பார்க்குகள் தொடங்கப்படுவதற்கான வரிசையில் உள்ள நிலையில், நம் முதலமைச்சரின் Trillion Dollar TN என்ற இலக்கை அடைவதற்கான விரைவுப் பாதையில் நாம் விரைந்து முன்னேறிக் கொண்டுள்ளோம் என தனது டிவிட்டர் பதிவை அமைச்சர் டிஆர்பி ராஜா முடித்துள்ளார்.

சேலம் - தஞ்சாவூர் ஆகிய இரண்டு மினி டைடல் பூங்காக்களிலும் பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளைத் உடனடியாக தொடங்க உள்ளன. தஞ்சாவூர் நியோ டைடல் பார்க்கில் Hamly Business Solutions, Inforios Software Technologies ஆகியவை அலுவலகம் அமைக்க உள்ளன. இதேபோல் சேலம் நியோ டைடல் பார்க்கில் Namma Office, AKS Hitech Smart Solutions, Tamil Zorous, Telth Healthcare, Axis Healthcare ஆகியவை அலுவலகம் அமைக்க உள்ளன. இந்த நிறுவனங்களின் வருகை, இப்பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+