ஜனவரி மாதம் 20ஆம் தேதி உலக பொருளாதார உச்சி மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு சார்பாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
ஜனவரி மாதம் 20ஆம் தேதி சுவிட்சா்லாந்தில் தொடங்கும் உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் இந்தியாவில் இருந்து மூன்று மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸ், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இது தவிர 100-க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சோ்ந்த தலைமை நிா்வாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனா்.
'நுண்ணறிவு யுகத்துக்கான ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளுடன் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. 5 நாட்களுக்கு டாவோஸ் நகரில் நடக்கும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு சார்பாக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கலந்து கொள்கிறார்.
இதற்கு முன்பு நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றுள்ளார். நடப்பாண்டு அவர் பங்கேற்பாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. வழக்கமாக இந்த மாநாட்டிற்கு மத்திய அமைச்சர்கள் செல்வார்கள். இந்த ஆண்டும் சில அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவோடு அவரது மகனும் அமைச்சருமான நர லோகேஷ் செல்ல இருக்கிறார். கா்நாடக சார்பாக துணை முதலமைச்சர் சிவக்குமாா், உத்தர பிரதேச அரசு சார்பாக அமைச்சா் சுரேஷ் கன்னா உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.
இதுதவிர தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி , கௌதம் அதானி மற்றும் முன்னணி நிறுவனங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட இந்தியாவைச் சோ்ந்த தலைமை செயல் அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர். உலகளவில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசின் தலைவா்கள் இந்த மாநாட்டிற்கு வருகை தருவார்கள்.
2018ஆம் ஆண்டு இந்த மாநாட்டில் தான் பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த முறை மாநாட்டில் உலக பொருளாதார சூழல், ரஷ்யா-உக்ரைன் போா், உள்ளிட்ட புவி அரசியல் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன.
உலகளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளா்ந்து வரும் சூழலில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, உயிரி தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications