இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயரும் இதேவேளையில் தமிழ்நாடு 1 டிரில்லியன் பொருளாதார நாடாக உயர இலக்கு கொண்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் எலக்ட்ரிக் வாகன சந்தையில் தமிழ்நாடு முக்கிய இடத்தையும் பங்கீட்டையும் பெற வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு அரசு தனது எலக்ட்ரிக் வாகன கொள்கையைப் புதுப்பித்துத் தென்கிழக்கு ஆசியாவிலேயே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சிறந்த உற்பத்தி தளமாக மாற வேண்டும் என்ற இலக்குடன் புதிய கொள்கையை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய கொள்கை மூலம் அடுத்த 5 வருடத்தில் தமிழ்நாட்டில் 50000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்க்கவும், அதன் மூலம் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு உருவாக்கிய இப்புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையை அறிமுகம் செய்த தமிழ்நாடு முதல் முக.ஸ்டாலின் ஈ-மொபிலிட்டி சொல்யூஷன்ஸ்-ஐ சோதனை திட்டமாகச் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி கமிஷனர்
இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி கமிஷனர்-ஐ இந்த மாநிலங்களில் நோடல் ஆபீசராக நியமிக்கப்பட்டு எலக்ட்ரிக் வாகன பயன்படுத்தலை உந்தவும் , ஒருங்கிணைக்கும் பணிகளையும் செய்ய உள்ளார்.
எலக்ட்ரிக் பேருந்து
இதேவேளையில் தமிழ்நாட்டில் மாநில போக்குவரத்தில் 2030க்குள் 30 சதவீத பேருந்துகளை எலக்ட்ரிக் பேருந்துகளாக மாற்றும் இலக்கையும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த எலக்ட்ரிக் வாகன கொள்கை டிசம்பர் 30, 2022 உடன் முடிவடைந்தது என்பதால் தற்போது புதிய கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தி
இப்புதிய கொள்கை மூலம் தமிழ்நாட்டின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மதிப்பு சங்கிலியை வலிமையாக்கும்.
இதேபோல் மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிப்பு, EV மொபிலிட்டி சொல்யூஷன்ஸ், பசுமை மின்சார உற்பத்தி மதிப்பு சங்கிலி மேம்பாடு, EV இன்பரா மேம்பாடு, எலக்ட்ரிக் வாகன துறையில் R&D வளர்ச்சி ஆகியவை இப்புதிய கொள்கை மூலம் மேம்படும்.
கட்டணங்கள்
அனைத்திற்கும் மேலாகத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) பொதுச் சார்ஜிங் நிலையங்களுக்கான கட்டணத்தை வணிக நிறுவனங்களை விட ஒரு படி மேலே நிர்ணயித்துள்ளது. மேலும் கட்டண மாற்றங்கள் அனைத்தையும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவின் கீழ் மாற்றப்படும். இதேபோல் சார்ஜிங் கட்டணத்தைப் பெரிய அளவில் குறைக்கும் திட்டத்தையும் இந்தக் கொள்கையின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications