மத்திய அரசு கஜானாவில் பணத்தை கொட்டும் தமிழ்நாடு..!

மத்திய அரசின் கஜானாவில் பெரும் பெரும் பங்கு வகிப்பது ஜிஎஸ்டி என்றாலும் நேரடி வரி வருமானம் முக்கிய பங்கீட்டை கொண்டுள்ளது. இந்த நேரடி வரி வசூலில் தான் மக்கள் செலுத்தும் வருமான வரி, அட்வான்ஸ் டாக்ஸ், கார்ப்ரேட் வரி, சொத்து வரி, கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ், STT போன்றவரை வருகிறது. இந்த நிலையில் நேரடி வரி வசூலில் அதிகம் பங்கீட்டு வகிக்கும் மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மொத்த நேரடி வரி வசூலில் 70% பங்களிக்கும் டாப் ஐந்து மாநிலங்களில் தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடம் பிடித்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் மட்டும் சுமார் 38.9% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.

மத்திய அரசு கஜானாவில் பணத்தை கொட்டும் தமிழ்நாடு..!


மும்பை மூன்றாவது இடத்தையும் குஜராத் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த 5 மாநிலம் மட்டும் நாட்டின் மொத்த நேரடி வரி வசூலில் சுமார் 70 சதவீத பங்கீட்டை கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் தனிநபர் வரிப் பங்களிப்பு தேசிய சராசரி அளவை விட அதிகமாக உள்ளது. இதற்கு மாறாக, ராஜஸ்தான், பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தனிநபர் நேரடி வரிகள் மற்றும் வருமானம் குறைவாக உள்ளது.

இருப்பினும், வருமான வரி தாக்கல் (ITR) விஷயத்தில் பார்த்தால் லிஸ்ட்டில் பெரிய மாற்றம் உள்ளது. 2024 மதிப்பீட்டு ஆண்டில், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மொத்த தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி தாக்கல்களில் 48% பங்களித்து முதல் ஐந்து இடங்களைப் பிடித்தன.

2015 ஆம் ஆண்டின் மதிப்பீட்டு ஆண்டை விட 2024 ஆம் ஆண்டின் மதிப்பீட்டு ஆண்டில் 5.1 கோடி அதிகமான ITR தாக்கல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் அதிகபட்ச உயர்வுடன் ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பின்னர் உத்தரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகியவை பின் தொடர்ந்தன. 2025 ஆம் ஆண்டு மதிப்பீட்டில் வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 9 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. 2022 ஆம் ஆண்டின் மதிப்பீட்டு ஆண்டில் இந்த எண்ணிக்கை வெறும் 6.89 கோடியாக இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 2.3 மடங்கு அதிகரித்து 2024 ஆம் ஆண்டில் 8.62 கோடியாக அதிகரித்துள்ளது. 2014 மதிப்பீட்டு ஆண்டை விட 2024 மதிப்பீட்டு ஆண்டில் கோடீஸ்வர வரி செலுத்துவோரின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்து 2.2 லட்சமாக அதிகரித்துள்ளது.

வரி நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளால் வரி தாக்கல்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+