தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை மீண்டும் 100ஐ தாண்டியது.. இன்று மீண்டும் உயர்வு..!

செவ்வாய்க்கிழமை பொதுத்துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது, மேலும் தமிழ்நாட்டில் மீண்டும் பெட்ரோல் விலை பிற மாநிலங்களுக்கு இணையாக 100 ரூபாயை கடந்துள்ளது.

தமிழக அரசு

தமிழக அரசு

ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சாமானிய மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவும் பெட்ரோல் விலையை 3 ரூபாய் வரையில் குறைத்து பெரிய உதவியை செய்தது.

அதிகப்படியான வரி

அதிகப்படியான வரி

ஆனால் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் மற்றும் டாலர் மதிப்புக்கு ஏற்ப விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசு விதித்த அதிகப்படியான வரி நடைமுறையில் இருக்கும் காரணத்தால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

பெட்ரோல் டீசல் விலை உயர்வு

இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 25 பைசாவும், டீசல் விலையை 30 பைசாவும் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள காரணத்தால் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

 

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

  • சென்னை - 100.23 ரூபாய்
  • டெல்லி - 102.64 ரூபாய்
  • கொல்கத்தா - 103.36 ரூபாய்
  • மும்பை - 108.67 ரூபாய்
  • பெங்களூர் - 106.21 ரூபாய்
  • ஹைதராபாத் - 106.77 ரூபாய்
  • கோழிக்கோடு - 103.11 ரூபாய்
  • போபால் - 111.14 ரூபாய்
  • இந்தூர்- 111.18 ரூபாய்
டீசல் விலை

டீசல் விலை

  • சென்னை - 95.59 ரூபாய்
  • டெல்லி - 91.07 ரூபாய்
  • கொல்கத்தா - 94.17 ரூபாய்
  • மும்பை - 98.80 ரூபாய்
  • பெங்களூர் - 96.66 ரூபாய்
  • ஹைதராபாத் - 99.37 ரூபாய்
  • கோழிக்கோடு - 96.34 ரூபாய்
கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

OPEC கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உலகநாடுகளில் தேவை அதிகரித்துள்ள நிலையிலும், உற்பத்தியை அதிகரிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.12 சதவீதம் அதிகரித்து 77.71 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.27 சதவீதம் அதிகரித்து 81.48 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

 டாலர் - ரூபாய் மதிப்பு

டாலர் - ரூபாய் மதிப்பு

மேலும் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 74.64 வரையில் இன்று உயர்ந்து உள்ளது. இதனால் இந்தியாவில் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+