சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் விலைவாசி உயர்வால் கடுமையான பாதிப்பை மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு பணக்காரர்கள், உற்பத்தி நிறுவனங்களைக் காட்டிலும் சாமானிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் காய்கறி விலை முதல் சாமானிய மக்கள் நுகர்வும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் தினசரி சம்பளம் வாங்கும் மக்கள் அதிகளவிலான பணத்தைச் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது, விலை அளவீடுகள் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
அக்டோபர் 2ஆம் தேதி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 பைசாவும், டீசல் விலை 30 பைசாவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இன்றைய உயர்வின் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தைத் தொட்டு உள்ளது.
சென்னை - 99.80 ரூபாய்
- சென்னை - 99.80 ரூபாய்
- டெல்லி - 102.14 ரூபாய்
- கொல்கத்தா - 102.77 ரூபாய்
- மும்பை - 108.19 ரூபாய்
- பெங்களூர் - 105.69 ரூபாய்
- ஹைதராபாத் - 106.26 ரூபாய்
- கோழிக்கோடு - 102.61 ரூபாய்
- போபால் - 110.63 ரூபாய்
- இந்தூர்- 110.67 ரூபாய்
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை அடுத்த விலை உயர்வுக்குக் கட்டாயம் 100 ரூபாயை தொட்டு விடும். மத்திய அரசு சராசரியாக ஒரு லிட்டர் பெட்ரோ விலை ஒவ்வொரு நாளும் 20.05 பைசா அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அடுத்த விலை உயர்வின் போது தமிழ்நாட்டில் 99.80 ரூபாயாக இருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துவிடும்.
டீசல் விலை
- சென்னை - 95.02 ரூபாய்
- டெல்லி - 90.47 ரூபாய்
- கொல்கத்தா - 93.57 ரூபாய்
- மும்பை - 98.16 ரூபாய்
- பெங்களூர் - 96.02 ரூபாய்
- ஹைதராபாத் - 98.72 ரூபாய்
- கோழிக்கோடு - 95.71 ரூபாய்
கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
சர்வதேச சந்தையில் இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த கச்சா எண்ணெய் விலை வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 1.13 சதவீதம் அதிகரித்து 75.88 டாலராக உயர்ந்துள்ளது. இதேபோல் ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.24 சதவீதம் அதிகரித்து 79.28 சதவீதம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications