தமிழர்களின் பாரம்பரிய திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையானது நான்கு நாட்களுக்கு பொதுமக்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கவுள்ளது. போகி பண்டிகை, தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என அடுத்தடுத்த விழாக்கள் அரங்கேறவுள்ளது.
இதற்கிடையில், நேற்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலைகட்டியது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை தொடங்க உள்ளது. இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுதொகுப்பு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த பரிசுதொகுப்புகளை பெறுவதற்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. எனவே, ரேஷன் கடைகளில் இதற்கான பணியை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025 என்னென்ன இருக்கும்?: இந்த ஆண்டிற்கான தமிழக அரசு வழங்கும் பரிசுதொகுப்பில் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதன்படி, இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
மக்கள் ஏமாற்றம்: இந்த முறை வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் என பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. முன்னதாக, கடைசி இரண்டு ஆண்டுகளில் சென்ற ஆண்டு ரூ.1000 ரொக்கமும், அதற்கு முந்தைய ஆண்டு ரூ.2500 வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி முந்திரி, பாசி பருப்பு, உலர் திராட்சை உள்ளிட்ட பொருட்களும் இல்லை.
அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்: இந்த பரிசு தொகுப்பில் ஏன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். அதில், இயற்கை பேரிடர்கள், அதனை சமாளிக்கும் வகையிலான நிதி ஒதுக்கீடு போன்ற விஷயங்களால் நடப்பாண்டு சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். எனவேதான் வழங்கப்படவில்லை என்று இதற்கான நல்ல நேரம் வரும் என்றும் கூறியுள்ளார்.
டோக்கன் வினியோகம்: பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் நாளை (ஜனவரி 3) தொடங்குகிறது. இந்த டோக்கன் வழங்கும் பணியானது பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் அத்துடன் ரேஷன் கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த டோக்கன்களை வைத்து அவற்றில் குறிப்பிட்டுள்ள தேதி நேரம் வைத்து சென்று பொருட்களை வாங்கலாம். எனவே, இதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
ரேஷன் கடைகளில் கிடைக்கும்: குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களை அவரவர்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி சென்று ரேஷன் கடைகளில் வாங்கிகொள்ளலாம். இந்த ஆண்டு 2.20 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசுக்கு 249.76 கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளது


Click it and Unblock the Notifications