பொங்கல் பண்டிகை ஆனது தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்போது அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. அதன்படி இந்த பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கும் 59 காசுகள் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளதாக கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, ரேஷன் கடை ஊழியர்கள், சேல்ஸ்மேன் மற்றும் பேக்கர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை ஒன்றுக்கு 59 காசு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, பொங்கல் திருநாள் 2025- ஐ முன்னிட்டு அரசின் சிறப்புச் சேவை திட்டமான பொங்கல் பரிசுத் தொகுப்பு 2025 விநியோகத் திட்டத்தினை செயல்படுத்தும் ரேஷன் கடை பணியாளர்கள் சேல்ஸ்மேன் மற்றும் பேக்கர்களுக்கு விநியோகம் மேற்கொள்ளப்படும் குடும்ப அட்டைகளின் அடிப்படையில், ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.0.59 பைசா வீதம் வழங்க சம்மந்தப்பட்ட சங்கங்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அத்தொகை நியாயவிலைக்கடை பணியாளர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதை கண்காணிக்குமாறு தெரிவித்துள்ளது.அச்செலவுகள் முதலில் சங்கங்களின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அச்செலவுகள் அந்த ஆண்டிற்குரிய மானியத் தொகைக்கான முன்மொழிவில் சேர்க்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதற்கிடையில், ரேஷன் கடைகளில் ஊழியர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதில் ரேஷன் கடையில் உள்ள சேல்ஸ்மேனுக்கு ரூ.6250 சுமார் 1 வருடம் வரை வழங்கப்படுகிறது. இதனை தொடந்து 1 வருடம் முடிந்தவுடன் ரூ.7800 முதல் ரூ.29000 வரை வழங்கப்படுகிறது.
அதேபோல், ரேஷன் கடை Packer-களுக்கு மாதம் 5,500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு பிறகு, தோராயமாக 7,800 ரூபாய் முதல் 26,000 ரூபாய் வரை வழங்கபடுகிறது. எனவே, இவர்களுக்கு இந்த ஜனவரி மாதம் மட்டும் சம்பளம் மற்றும் ஊக்கத்தொகையை கூடுதலாக வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications