FIFA உலகக் கோப்பை 2022 போட்டிகள் கத்தார் நாட்டில் பெரும் கொண்டாட்டத்துடன் துவங்கிய நிலையில் புட்பால் ரசிகர்கள் தினமும் ஆரவாரத்துடன் போட்டிகளைக் கண்டுகளித்து வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டுக்கான FIFA உலகக் கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில் நடக்க உள்ளது என்பதை 2010ல் முடிவு செய்யப்பட்ட காரணத்தால் கத்தார் அரசு, இந்தப் போட்டியின் மூலம் உலக மக்களுக்கு அந்நாட்டின் வளத்தையும், செழிப்பையும், வர்த்தக வாய்ப்புகளையும், முதலீட்டு வாய்ப்புகளையும் காட்ட வேண்டும் என்பதற்காகச் சுமார் 220 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து இப்போட்டியை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஆடைகள் மற்றும் பல்வேறு டெக்ஸ்டைல் தேவைக்காக கத்தார் உலகில் வேறு எந்த நாடுகளுக்கும் செல்லாமல் மொத்தமாகத் திருப்பூரில் ஆர்டர் செய்துள்ளது.
FIFA உலகக் கோப்பை 2022
கத்தார் அரசு FIFA உலகக் கோப்பை 2022 போட்டிகளுக்குத் தேவையான டிசர்ட், டிராக்சூட், கேப் உள்ளிட்ட அனைத்து டெக்ஸ்டைல் தேவைகளையும் திருப்பூரில் ஆர்டர் செய்து மொத்தமாக வாங்கியது. ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இப்போட்டியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான டெக்ஸ்டைல் பொருட்கள் திருப்பூரில் இருந்து வந்தது.
திருப்பூர்
கினிட்வேர் பிரிவை அடிப்படையாக வைத்து திருப்பூர் நகரம் தனது வர்த்தகப் பாதையைத் துவங்கினாலும், இன்று இந்தியாவைத் தாண்டி தற்போது உலகளவிலான டெக்ஸ்டைல் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. உலகின் பல முன்னணி டெக்ஸ்டைல் பிராண்டுகளுக்கு ஆல் டைம் சப்ளையர்கள் திருப்பூரில் அதிகமானோர் உள்ளனர்.
கொச்சி விமான நிலையம்
FIFA உலகக் கோப்பை 2022 போட்டிகளுக்குத் தேவையான டிசர்ட், டிராக்சூட், கேப் உள்ளிட்ட அனைத்து டெக்ஸ்டைல் பொருட்களைத் திருப்பூர் தயாரிப்பாளர்கள் கேரளாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளனர். அக்டோபர் 1 முதல் நவம்பர் 12 வரையிலான காலகட்டத்தில் சுமார் 17 ஆர்டர்கள் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தோஹா-விற்குச் சென்றுள்ளது.
தற்காலிகமானது
FIFA உலகக் கோப்பை 2022 போட்டிக்கான ஆர்டர் என்பது தற்காலிகமானது மட்டுமே, இப்போட்டிகள் முடிந்ததும் சப்ளை நிறுத்தப்படும் என்ற போதிலும் தமிழகத்தின் திருப்பூரில் உள்ள ஆடை நிறுவனங்கள் மற்றும் கொச்சியில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
220 பில்லியன் டாலர்
FIFA உலகக் கோப்பை போட்டிக்காகவும் அதன் ஏற்பாடுகளுக்காகவும் சுமார் 220 பில்லியன் டாலர்களைச் செலவிட்டு உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி டிசம்பர் 18 ஆம் தேதி லுசைல் ஸ்டேடியத்தில் (Lusail) நடைபெறும்.
6 புதிய புட்பால் ஸ்டேடியம்
இந்தப் போட்டிக்காகக் கத்தார் 6 புதிய புட்பால் ஸ்டேடியங்களைக் கட்டியது மற்றும் ஏற்கனவே உள்ள இரண்டு மைதானங்களை, பயிற்சி தளங்களுடன் புதுப்பித்துள்ளது. இதற்காக மட்டும் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையைக் கத்தார் அரசு முதலீடு செய்துள்ளது.
உள்கட்டமைப்பு வசதிகள்
இதைத் தொடர்ந்து 210 பில்லியன் டாலரில் விமான நிலையங்கள், புதிய சாலைகள், ஹோட்டல்களுடன் கூடிய இன்னோவேஷன் ஹப் மற்றும் அதிநவீன நிலத்தடி போக்குவரத்து போன்றவற்றுக்குச் செலவு செய்துள்ளது. இதில் முக்கியமாகத் தங்குமிட வளாகத்தைக் கட்ட 15 பில்லியன் டாலரும், மெட்ரோ சேவைக்காக 36 பில்லியன் டாலரும் செலவு செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications