இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சியில் முன்னோடியாக இருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து சுமார் 1 லட்சம் கோடி ரூபாய், டாலரில் கணக்கிட்டால் சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையைத் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விருப்பங்களை நிறுவனங்கள் கொடுத்துள்ளது.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் முதலீட்டு விருப்பங்களை அதிகளவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்த மாநிலங்களில் இந்தியாவிலேயே முதன்மையாக விளங்குகிறது. இதேபோல் முதலீட்டு அறிவித்து 3-6 மாதத்திற்குள் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா நடக்கும் வேகமாகக் கட்டமைப்பைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளதால் முதலீட்டாளர்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது.

இந்த அதிரடி வளர்ச்சியும், வேகமான செயல்பாடு காரணமாக தமிழ்நாட்டை தற்போது சர்வதேச முதலீட்டாளர்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவுடன் ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, உலகளாவிய உற்பத்தி மையங்களான வியட்நாம் மற்றும் மெக்சிகோவுடனும் நேரடியாக ஒப்பிடத் துவங்கியுள்ளனர் என ப்ளூம்பெர்க் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் வலுவான தொழில்துறைக்கான ஏதுவான கட்டமைப்பு மற்றும் திறமையான பணியாளர்கள் கூட்டம் ஆகியவை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது ஆப்பிள், கூகுள், ஜாபிள், கார்னிங் எனப் பல அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்து தொழிற்சாலையும், அலுவலகத்தையும் அமைத்து வருகிறது.
நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியாவில் எந்தொரு மாநிலமும் பெற்றிடாத வகையில் சுமார் 350 மில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் உற்பத்தி பிரிவில் பெற்றுள்ளது.
மறுபுறம் வியட்நாம் நாட்டின் மின்சாரம் வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட், 500 மில்லியன் டாலர் முதலீடு செய்து புதிய தொழிற்சாலை அமைத்து வருகிறது. இதேபோல் டாட்டா மோட்டார்ஸ் ஜாகுவார்-லேண்ட் ரோவர் தொழிற்சாலைக்காக ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்யத் தயாராகி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாடு உலகளாவிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு விருப்பமான முதலீட்டுத் தளமாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டு ஆட்டோமொபைல் வளர்ச்சிப் பாதையில் மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில் ஒன்று, மூன்று ஆண்டுகள் பிறகு இந்தியாவுக்குத் திரும்புவதற்கான ஃபோர்டு நிறுவனத்தின் முடிவு.தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் தொழிற்துறை அமைச்சர் TRB ராஜா தலைமையிலான அரசின் அமெரிக்கப் பயணத்தில் இது சாத்தியமானது. ஃபோர்டு நிறுவனம் சென்னையில் உள்ள அதன் தொழிற்சாலையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சியில் "சீனா பிளஸ் ஒன்" என்ற உலக நாடுகளின் கொள்கை மூலம் மிகப்பெரிய அளவில் பலன் அளித்துள்ளது. சீனாவில் இருக்கும் பிற நாட்டு நிறுவனங்கள் தங்கள் சப்ளை செயினை சீனாவிலிருந்து விலகிப் பிற நாடுகளுக்கு மாற்றும் போது இந்தியா முக்கியமான ஆப்ஷனாக இருந்தது, அதிலும் பலருக்குத் தமிழ்நாடு முக்கிய தேர்வாக இருந்தது என்றால் மிகையில்லை.
உலகளாவிய உற்பத்தி தரங்களுக்கு இணையாகத் தமிழ்நாட்டின் உற்பத்தி தரம் உள்ளது, இதனாலேயே வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஈர்க்கும் சக்தியைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்தியாவிலேயே "சீனா பிளஸ் ஒன்" கொள்கை மூலம் அதிகம் பலன் அடைந்தது தென்னிந்தியா தான், அதிலும் குறிப்பாகத் தமிழ்நாடு பெரும் பங்கு வகிக்கிறது.
சீனா பிளஸ் ஒன் வீரியத்தை முழுமையாகப் பயன்படுத்த, தமிழ்நாடு அரசு ஆரம்பத்தில் இருந்தே தீவிரமான அணுகுமுறையைக் கொண்டிருந்ததன் விளைவாக அதிகப்படியான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் TRB ராஜா மற்றும் அவரது குழு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு இத்துறை நிறுவனங்களைக் குறிவைக்கத் துங்கியது தான் இந்த மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.
இதேவேளையில் தமிழ்நாடு அரசு வெளிநாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான உள்ளூர் சப்ளையர்களுடன் இணைப்பதிலும், துறைமுக செயல்திறனை மேம்படுத்துவதிலும், இட வசதி, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில் பெரிய அளவு கவனம் செலுத்திய காரணத்தாலும் தொடர்ந்து வரும் முதலீட்டுக்கு ஈடுகொடுக்க முடிந்தது.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழ்நாடு அரசு தற்போது செமிகண்டக்டர், சிப் டிசைன் மற்றும் லைப் சையின்ஸ் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) துறையில் இந்தியாவில் முன்னோடியாகத் திகழும் வகையில் அதிக எண்ணிக்கையிலான பிஹெச்டி பட்டதாரிகள் மற்றும் காப்புரிமைகள் தமிழ்நாட்டிலிருந்து பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு அறிவுசார் பொருளாதார மையமாக உருவாகும் பயணத்தில் உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications