ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு அரசு பிரத்தியேக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது . இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். ஏற்கனவே தொழில் நகரமாக வளர்ந்து வரக்கூடிய ஓசூர் நகரின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகின.
இந்த மாநாட்டில் மொத்தமாக 24,307 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கக்கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் தகவலின் படி 23,303.15 கோடி ரூபாய் முதலீட்டில் 44 ,870 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் புதிதாக கையெழுத்திடப்பட்டன.

இது தவிர குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பாக 1003.85 கோடி ரூபாய் முதலீட்டில் 4483 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. எனவே மொத்தமாக 24,307 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
Hosur : The fastest Growing City in TN and among the fastest in India 🚀
— Chennai Updates (@UpdatesChennai) September 11, 2025
pic.twitter.com/Ptww8uVlkP
இது தவிர முதலமைச்சர் ஸ்டாலின் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திறன் கொண்ட மூன்று முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் . அதேபோல 7900 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையிலான நான்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பல்வேறு நிறுவனங்களிலும் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

இந்த முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ஓசூர் திறமையும் புதுமையும் சந்திக்கிற நகரமாக இருக்கிறது தமிழ்நாட்டின் வரைபடத்தில் தனித்து அடையாளம் பெற்ற நகரமாக ஓசூர் திகழ்கிறது இது வளர்ச்சியின் முகம் என பெருமிதம் தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு அரசு நினைத்த பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்றால் தொழில் வளர்ச்சி தான் அதற்கு அடிப்படை எனவே தான் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை தன்னுடைய அரசாங்கம் எடுத்து வருகிறது எனக் கூறினார்.
தங்களுடைய ஆட்சி அமைந்த பின் கையெழுத்திடப்பட்ட 77 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளன என அப்போது அவர் சுட்டிக்காட்டினார் . நாட்டில் தொழில் வளர்ச்சி முகமாக ஓசூர் மாறி உள்ளது என குறிப்பிட்ட அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கொண்டு வரப்பட்டிருக்கும் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார் . அடுத்த கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அக்டோபர் 9 மற்றும் 10ஆம் தேதியில் உலக புத்தொழில் மாநாடு நடைபெற உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது அறிவிப்பு வெளியிட்டார்.
More From GoodReturns

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?



Click it and Unblock the Notifications