தமிழ்நாட்டின் 2020-21 நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை, அதாவது தமிழக அரசின் வருவாய் மற்றும் செலவுகளுக்கு மத்தியிலான வித்தியாசம் 53,038.61 கோடி ரூபாயில் இருந்து 92,305.07 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது எனக் கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அமைப்பின் தணிக்கை செய்யப்படாத தரவுகள் கூறுகிறது.
கடந்த நிதியாண்டில் லாக்டவுன், கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான கட்டுப்பாடுகள் ஆகியவை இருந்த காரணத்தால் தமிழ்நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு அரசின் வருவாய் குறைந்துள்ளது.
இதேவேளையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தத் தமிழக அரசு அதிகளவிலான செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது, இதனால் அரசின் செலவுகள் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டின் அரசின் வருவாய்
கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அமைப்பின் தரவுகள் அடிப்படையில் மாநில அரசின் வரி வருவாய் மற்றும் மத்திய அரசின் வரிகள் ஆகியவற்றைச் சேர்த்து தமிழக அரசு 2020-21 நிதியாண்டில் மட்டும் 1,74,255.66 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது. இது 2019-20ஆம் நிதியாண்டை அளவீட்டை ஒப்பிடுகையில் 2.80 சதவீதம் குறைவு.
தமிழ்நாட்டின் மொத்த செலவுகள்
இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மொத்த செலவுகள் 2,32,320.64 கோடி ரூபாயில் இருந்து 2020-21ஆம் நிதியாண்டில் 2,66,560.73 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒருபக்கம் மொத்த வருவாய் அளவுகள் 2.80 சதவீதம் சரிந்துள்ள போது, மொத்த செலவுகளின் அளவு 14.7 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
மொத்த நிதி பற்றாக்குறை
இதனால் தமிழ்நாட்டு அரசின் மொத்த நிதி பற்றாக்குறை அளவு 2019-20 நிதியாண்டில் 53,038.61 கோடி ரூபாய் அளவில் இருந்து 2020-21 நிதியாண்டில் 92,305.07 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் வரி வருவாய்
தமிழக அரசின் மொத்த வருவாயில் சுமார் 70 சதவீத வரி வருமானம் State's own tax revenue பிரிவு மூலம் கிடைக்கிறது. இந்தப் பிரிவின் கீழ் தான் மதுபானம் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், மாநில கலால் வரி, விற்பனை மற்றும் வர்த்தக வரி, மாநில ஜிஎஸ்டி வரி, பத்திர மற்றும் பதிவு கட்டணங்கள் வருகிறது.
SOTR வரி வருவாய் அளவு
இப்பிரிவில் 2019-20 நிதியாண்டில் 1,01,211.94 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்ற நிலையில், 2020-21 நிதியாண்டில் 1,01,140.09 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது கடந்த நிதியாண்டை விடவும் 0.07 சதவீதம் மட்டுமே குறைவாகவும்.
மதுபானம் விற்பனை வரி
மேலும் மாநில கலால் வரியில் 8.5% உயர்வுடன் 7,821.66 கோடி ரூபாயும், விற்பனை மற்றும் வர்த்தக வரிக் கீழ் (பெட்ரோலியம் பொருட்கள், மதுபானம் விற்பனை வரிகள் இதில் அடங்கும்) 2.3% உயர்வுடன் 43,490.05 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வரி 1.12% சரிவுடன் 37,942.08 கோடி ரூபாயும், பத்திர மற்றும் பதிவு கட்டணம் வாயிலாக 7.54% உயர்வுடன் 11,675.11 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.
அதிமுக அரசின் பட்ஜெட் அறிக்கை
தேர்தலுக்கு முன்பும் அதிமுக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் 2020-21 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறை 96,889.97 கோடி ரூபாயாக இருக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தணிக்கைக்குப் பின் உண்மையான அளவீடுகள் திமுக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட் அறிக்கையில் தான் தெரிய வரும்.
திமுக அரசு
தமிழ்நாட்டின் கடன் அளவு கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கடன் சுமையைச் சமாளிக்கும் மிகப்பெரிய பொறுப்பு முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் அவர்களுக்கு உள்ளது. இந்நிலையில் கடன் சுமை குறைப்பதற்கான திட்டத்தைப் பட்ஜெட் தாக்கலில் எதிர்பார்க்கலாம்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications