கெத்து காட்டும் கோயம்புத்தூர்.. செமிகண்டக்டர் பிரிவில் தமிழ்நாடு புதிய சாதனை!! TRB ராஜா போட்ட டிவீட்..!!

கோவை: இந்தியாவே தற்போது செமிகண்டக்டர் உற்பத்தியில் தான் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக செமிகண்டக்டர் உற்பத்திக்கு தேவையான உபகரணம் கோயமுத்தூரில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு Yield Engineering Systems, Inc. (YES) எனப்படும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

கெத்து காட்டும் கோயம்புத்தூர்.. செமிகண்டக்டர் பிரிவில் தமிழ்நாடு புதிய சாதனை!! TRB ராஜா போட்ட டிவீட்

இதற்காக தமிழ்நாட்டில் 150 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும் தங்களுடைய இந்த உற்பத்தி ஆலை மூலம் 300 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது. இது தவிர விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் என தங்களுடைய இந்த ஆலை மூலம் 1200 மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கோயம்புத்தூரில் சூலூர் பகுதியில் யெஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறுவப்பட்டது. இந்த ஆலையில் செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான சாதனம் தயார் செய்யப்பட்டு அது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் செமிகண்டக்டருக்கு தேவையான முக்கியமான இயந்திரத்தை தயார் செய்து ஏற்றுமதி செய்த முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமை இதன் மூலம் கிடைத்திருக்கிறது.

VeroTherm Formic Acid Reflow tool என்ற இந்த சாதனமானது உலகின் முன்னணி செமிகண்டக்டர் உற்பத்தியாளருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. கோயம்புத்தூரில் இருக்கும் சூலூர் ஆலையிலிருந்து இந்த சாதனத்தை ஏற்றுமதி செய்யும் நிகழ்வு நடைபெற்றது. ஏஐ திறன் கொண்ட செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்வதற்கு இந்த கருவி முக்கியமாக தேவைப்படும் என யெஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.

தன்னுடைய முதல் புரோட்டோடைப்பை டிசம்பர் மாதமே அமெரிக்காவிற்கு இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்தது. இந்த நிலையில் தற்போது முழுமையான ஒரு இயந்திரத்தையே தயாரித்து ஏற்றுமதி செய்து இருக்கிறது. இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் இது முக்கியமான மைல்கல் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். யெஸ் நிறுவனத்தின் சூலூர் ஆலையிலிருந்து வெற்றிகரமாக முதல் செமிகண்டக்டர் சாதனம் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா கூறியுள்ளார்.

கடந்தாண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் மூலமாகவே இந்த ஆலை தமிழ்நாட்டுக்கு வந்ததாக கூறி இருக்கும் அவர் தமிழ்நாடு செமிகண்டக்டர் கொள்கைக்கு கிடைத்த முக்கியமான வெற்றி இது என்றும் தெரிவித்துள்ளார். முதலீடு குறித்த அறிவிப்புகளை வெற்றி அறிவிப்புகளாக மட்டுமே இல்லாமல் அதனை செயல்படுத்தி வேலை வாய்ப்புகளாகவும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு கருவியாகவும் அரசு மாற்றுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என தெரிவிக்கிறார்.

பல்வேறு சவால்கள் இருந்தாலும் தமிழ்நாடு தொடர்ந்து செமிகண்டக்டர் பிரிவில் வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது என குறிப்பிட்டு இருக்கும் அவர், இதனால் தான் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் சூலூர் மற்றும் பல்லடம் பகுதியில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான செமிகண்டக்டர் திட்டத்தின் கீழ் செமிகண்டக்டர் உற்பத்தி பூங்காக்கள் நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது எனக் கூறியிருக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+