சென்னை: இந்தியாவின் டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2024-ம் நிதியாண்டில் இந்தியா மொத்தம் 34.43 பில்லியன் டாலர் மதிப்பிலான டெக்ஸ்டைல் சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இதில், தமிழ்நாடு மாநிலம் மட்டும் 7.15 பில்லியன் டாலர் மதிப்பிலான டெக்ஸ்டைல் சரக்குகளை ஏற்றுமதி செய்துள்ளது, இது இந்தியாவின் மொத்த டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் 20.78% பங்களிப்பாகும். இதன் மூலம், இந்தியாவின் டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தமிழ்நாடு தொடர்ந்து தரமான மற்றும் புதுமையான டெக்ஸ்டைல் பொருட்களை உற்பத்தி செய்து வருவதே இந்த சாதனைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதேபோல் உலக நாடுகளில் இருக்கும் முன்னணி பிறாண்டுகள் உடனான நீண்ட கால வர்த்தக தொடர்பு, பிற நாடுகளைக் காட்டிலும் குறைவான விலையில், தரமான பொருட்களைத் தயாரிப்பது போன்ற பல காரணத்தால் டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் தமிழ்நாடு எப்போதும் முதலிடத்தில் உள்ளது.
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தமிழ்நாட்டைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன. தமிழ்நாடு தொழில் துறையினர் மற்ற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் டெக்ஸ்டைல் ஏற்றுமதிக்கு பெரும் பங்கு வகிப்பது திருப்பூர் தான்.
டெக்ஸ்டைல் துறையில் இந்தியாவில் எந்த மாநிலம் எவ்வளவு ஏற்றுமதி செய்துள்ளது குறித்த முழு பட்டியல்:
தமிழ்நாடு - 7.152 பில்லியன் டாலர்
குஜராத் - 5.287 பில்லியன் டாலர்
மகாராஷ்டிரா - 3.971 பில்லியன் டாலர்
ஹரியானா - 3.620 பில்லியன் டாலர்
உத்தரப்பிரதேசம் - 3,396.20 மில்லியன் டாலர்
கர்நாடகா - 2,629.26 மில்லியன் டாலர்
ராஜஸ்தான் - 1,598.07 மில்லியன் டாலர்
பஞ்சாப் - 1,414.24 மில்லியன் டாலர்
மத்திய பிரதேசம் - 1,312.96 மில்லியன் டாலர்
டெல்லி - 1,028.77 மில்லியன் டாலர்
மேற்கு வங்காளம் - 872.69 மில்லியன் டாலர்
டாமன் & டையூ மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி - 696.16 மில்லியன் டாலர்
ஆந்திரப் பிரதேசம் - 461.57 மில்லியன் டாலர்
கேரளா - 371.14 மில்லியன் டாலர்
ஹிமாச்சல பிரதேசம் - 236.12 மில்லியன் டாலர்
தெலுங்கானா - 117.47 மில்லியன் டாலர்
ஜம்மு & காஷ்மீர் - 88.61 மில்லியன் டாலர்
உத்தரகாண்ட் - 41.57 மில்லியன் டாலர்
ஒடிசா - 34.76 மில்லியன் டாலர்
பீகார் - 29.43 மில்லியன் டாலர்
ஜார்கண்ட் - 25.06 மில்லியன் டாலர்
சண்டிகர் - 16.09 மில்லியன் டாலர்
புதுச்சேரி - 12.99 மில்லியன் டாலர்
சத்தீஸ்கர் - 3.99 மில்லியன் டாலர்
கோவா - 2.36 மில்லியன் டாலர்
அசாம் - 1.74 மில்லியன் டாலர்
நாகாலாந்து - 0.15 மில்லியன் டாலர்
மிசோரம் - 0.04 மில்லியன் டாலர்
மேகாலயா - 0.03 மில்லியன் டாலர்
மேலும் இந்தியாவில் இருந்து எந்த நாட்டுக்கு அதிகமாக டெக்ஸ்டைல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது குறித்த முழு பட்டியல்:
அமெரிக்கா - 10.022 பில்லியன் டாலர்
பங்களாதேஷ் - 2.179 பில்லியன் டாலர்
பிரிட்டன் - 1.970 பில்லியன் டாலர்
ஐக்கிய அரபு நாடுகள் - 1.954 பில்லியன் டாலர்
ஜெர்மனி - 1.303 பில்லியன் டாலர்
பிரான்ஸ் - 972.04 மில்லியன் டாலர்
நெதர்லாந்து - 963.59 மில்லியன் டாலர்
ஸ்பெயின் - 879.89 மில்லியன் டாலர்
சீனா - 870.76 மில்லியன் டாலர்
இத்தாலி - 727.49 மில்லியன் டாலர்
இலங்கை - 693.13 மில்லியன் டாலர்
துருக்கி - 660.32 மில்லியன் டாலர்
ஆஸ்திரேலியா - 656.73 மில்லியன் டாலர்
சவுதி அரேபியா - 549.77 மில்லியன் டாலர்
கனடா - 489.03 மில்லியன் டாலர்
மெக்சிகோ - 376.82 மில்லியன் டாலர்
பெல்ஜியம் - 375.09 மில்லியன் டாலர்
ஜப்பான் - 357.72 மில்லியன் டாலர்
போலந்து - 341.15 மில்லியன் டாலர்
எகிப்து - 337.68 மில்லியன் டாலர்
பிரேசில் - 313.76 மில்லியன் டாலர்
நைஜீரியா - 300.86 மில்லியன் டாலர்
டென்மார்க் - 297.66 மில்லியன் டாலர்
கொரியா- 286.17 மில்லியன் டாலர்
வியட்நாம் - 256.17 மில்லியன் டாலர்
தென்னாப்பிரிக்கா - 255.66 மில்லியன் டாலர்
போர்ச்சுகல் - 246.52 மில்லியன் டாலர்
ஸ்வீடன் - 240.98 மில்லியன் டாலர்
நேபாளம் - 235.61 மில்லியன் டாலர்
மலேசியா - 230.44 மில்லியன் டாலர்
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications