தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, இந்தியாவின் பிற முக்கிய மாநிலங்களின் பொருளாதார மாதிரிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு தனித்துவமான போக்கைக் கொண்டுள்ளது என தமிழ்நாடு அரசு முதல் முறையாக வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூபாய் குறியீட்டை மாறியது தொடர்பாக இந்தியா முழுவதும் இன்று தமிழ்நாட்டு பட்ஜெட்டை குறித்து பேசப்பட்டு வரும் வேளையிலும், 2026 ஆம் ஆண்டு பொது தேர்தல் அறிவிக்கப்பட உள்ள வேளையிலும், 2030க்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற முக்கிய இலக்கை நோக்கி தமிழ்நாட்டின் பயணத்தில் முக்கியமான பட்ஜெட் ஆக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் மகாராஷ்டிரா, கர்நாடகா அல்லது மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில், பொருளாதார நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட பெருநகரத்தை மையமாகக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி பல நகரங்களை உள்ளடக்கியதாக பரவலாக்கப்பட்டுள்ளது. இந்த பரவலான பொருளாதார கட்டமைப்பு, மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வேகத்தை பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை, மதுரை, திருப்பூர், திருச்சி, சேலம் போன்ற பல நகரங்கள் மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நகரங்கள் ஒவ்வொன்றும் மாநிலத்தின் மொத்த பொருளாதார உற்பத்தியை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கின்றன.
இந்த பல்வகைப்படுத்தப்பட்ட பொருளாதார நிலப்பரப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதிலும், தனிநபர் வருமானத்தில் சமநிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) பிராந்தியங்களின் பங்களிப்பு குறித்த விரிவான தரவுகளையும் இந்த பொருளாதார ஆய்வறிக்கை வழங்குகிறது. மாநிலத்தின் மக்கள் தொகையில் 31.8% ஆக இருக்கும் வடக்கு மண்டலம், GSDP-யில் 36.6% பங்களிப்பை வழங்குகிறது. இது மக்கள் தொகை பங்கீட்டை கீட்டிலும் அதிகமான பொருளாதார நடவடிக்கைகளின் செறிவு இருப்பதைக் குறிக்கிறது.
அதேபோல், 22.8% மக்கள் தொகையைக் கொண்ட மேற்கு மண்டலம், 29.6% GSDP-யை உருவாக்குகிறது. ஆனால், 20.5% மக்கள் தொகையைக் கொண்ட தென் மண்டலம், 18.8% GSDP-யை மட்டுமே வழங்குகிறது. இது அதன் மக்கள் தொகை அளவிற்கு பொருளாதார உற்பத்தியின் சற்று குறைந்த விகிதத்தைப் காட்டுகிறது.
இதை தொடர்ந்து 25.5% மக்கள் தொகையைக் கொண்ட கிழக்கு மண்டலம், 15.1% GSDP பங்களிப்பைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு தனது பொருளாதார வளர்ச்சி திட்டத்தை எளிதாக உருவாக்க முடியும்.
இந்த மண்டல வேறுபாடுகள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள நுணுக்கமான இயக்கவியலை காட்டுகின்றன. மேலும், அனைத்து பிராந்தியங்களிலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த சிறப்பு உத்திகளின் அவசியத்தை இந்த பொருளாதார ஆய்வறிக்கை எடுத்துறைத்துள்ளது. இவை அனைத்தும் இன்றைய பட்ஜெட் அறிக்கையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆய்வறிக்கை, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு சில நகரங்களை மட்டும் சார்ந்து இல்லாமல், பல நகரங்களின் பங்களிப்போடு பரந்து விரிந்து காணப்படுகிறது என்பதை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் ஐடி முதல் உற்பத்தி துறைக்கான வளர்ச்சி வாய்ப்புகள் அதிகம். இதற்கு காரணம் மாநிலம் முழுவதும் இருக்கும் பிடித்த பட்டதாரிகள்.
இந்த பல நகர வளர்ச்சி கட்டமைபு்பு மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, அனைத்து பிராந்தியங்களிலும் சமமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், இந்த பரவலாக்கப்பட்ட வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் வழிவகுக்கிறது. தமிழ்நாட்டின் இந்த தனித்துவமான பொருளாதார கட்டமைப்பு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மட்டும் அல்லாமல் எப்போதும் எட்டா கனியாகவே இருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications