மின்சார கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்த வரும் நிலையில் அரசே இலவசம் மின்சாரம் வழங்குகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அரசு வழங்கும் ஒரு பொன்னான திட்டம்தான் "பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா" இந்த இலவச சூரிய ஒளி மின்சாரத் திட்டம், சுமார் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்பவர்கள், இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் தங்கள் வீட்டின் மேற்கூறையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்பவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் வெளியிட்டுள்ளது.
சோலார் பேனல்களை தங்கள் வீட்டின் மேல் கூரையில் பொருத்திக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் வரை இலவசமாகப் பெற முடியும். இதுகுறித்து தமிழக மின்சார வாரியம் தனது X தளத்தில் "உங்கள் வீட்டிற்கு சூரிய மேற்கூரை மூலம் சூரிய ஒளியின் பரிசை கொடுங்கள்!

1 கிவா ரூ30,000/-
2 கிவா ரூ 60,000/-
3 கிவா ரூ 78,000/- வரை மானியம்.
பூமியை பசுமையாக வைத்திருக்க உதவுங்கள். இணைய தளத்தில் முதலில் பதிவு செய்யுங்கள் என்று பதிவு இணைய முகவரியைக் கொடுத்து போஸ்ட் செய்துள்ளது.

எப்படி விண்ணப்படிப்பது?: தங்கள் வீடுகளில் சூரிய மேற்கூரைகளை அமைக்க விரும்புபவர்கள் https://www/pmsuryaghar.gov.in/ மற்றும் https://tnebltd.gov.in/usrp/applynatapp.xhtml ஆகிய 2 இணைதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
சோலார் பேனல்களை அமைப்பதன் மூலம் ஒரு வீட்டில் ஆண்டுக்கு சுமார் 15,000 முதல் 18,000 ரூபாய் வரை மின்சாரக் கட்டணத்தை சேமிக்க முடியும். இந்தத் திட்டத்திற்கு இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான மானியம் உங்கள் வங்கி கணக்கில் 7 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் செலுத்தப்படும்.
சோலார் பேனல்களை பொருத்துவதன் மூலம் இலவச மின்சாரம் மட்டுமின்றி அது தொடர்புடைய வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஒருவர் சரியான மின் இணைப்பைப் பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த ஒரு சோலார் பேனல் திட்டத்தின் மூலமாகவும் மானியத்தை பெற்றிருக்கக் கூடாது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications