ஒரு மாநிலத்தின் பொருளாதாரம், வர்த்தகம், ஏற்றுமதி வளர்ச்சி அடைய தடையில்லா மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் அவசியம். இதை சாத்தியப்படுத்த ஒவ்வொரு மாநிலமும் பல முயற்சிகளை செய்கிறது, அப்படி தமிழ்நாட்டின் மின்சார விநியோகத்தை உறுதி செய்வது TANGEDCO.
2021 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு நியமிக்கப்பட்ட தனியார் ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY), அரசுக்குச் சொந்தமான மின்சாரப் பயன்பாட்டு நிறுவனமான TANGEDCO-வை மூன்று தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்க பரிந்துரைக்கும் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

TANGEDCO அமைப்பின் மொத்த கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, மேலும் இந்த அறிக்கையில் TANGEDCO அமைப்பின் கடனை எப்படி சமாளிப்பது, எப்படி திறம்பட நிர்வகிப்பது என்பது தொடர்பான விபரங்கள் அடங்கியதாக கூறப்படுகிறது.
எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY) அறிக்கையில் TANGEDCO அமைப்பு மூன்று நிறுவனங்களாக உடைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது மின்சார உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என தனித்தனி பொறுப்புகள் கொண்ட நிறுவனமாக இதை பிரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிட்டு உள்ளது.
எரிசக்தி துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா இதுகுறித்து ஐஈ பத்திரிக்கைக்கு பேசுகையில் இந்த பிரச்சினையில் தமிழ்நாடு அரசு இன்னும் எவ்விதமான முடிவையும் எடுக்கவில்லை என்றார்.
நாடு முழுவதும் உள்ள பல மின் விநியோக நிறுவனங்கள் (டிஸ்காம்கள்) ஏற்கனவே மின் துறையை உற்பத்தி மற்றும் விநியோகப் பிரிவுகளாகப் பிரித்துள்ளன. TANGEDCO அமைப்பிற்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே மின்சார உற்பத்தியில் தேவைப்படும் அதிகப்படியான முதலீடு தான்.
தமிழ்நாட்டுக்கான மின்சார உற்பத்தியை உறுதி செய்ய வட இந்திய மாநிலங்களில் இருந்து நிலக்கரியைப் பெற வேண்டிய அவசியம் மற்றும் பெரும் போக்குவரத்துச் செலவுகள் காரணமாக மின் உற்பத்தியில் அதிக முதலீடு செய்தாக வேண்டிய சூழ்நிலை இருக்கும் காரணத்தால் அதிக முதலீடுகள் தேவைப்படுகிறது.
எர்ன்ஸ்ட் அண்ட் யங் TANGEDCO அமைப்பையும் இத்துறையில் இருக்கும் தனியார் போட்டி நிறுவனங்கள், மொத்த மற்றும் நிகர லாபம் மற்றும் செலவினங்களின் போக்குகளை பகுப்பாய்வு செய்த பிறகே இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளதாக TANGEDCO அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த பிரிந்துரையை அரசு ஆய்வு செய்யும்.


Click it and Unblock the Notifications