இந்த மார்டன் மற்றும் நவீன வாழ்க்கை முறையிலும் பெண்களுக்கு புடவை மீதான ஆர்வம் குறையவில்லை, அதிலும் குறிப்பாக தற்போது இளம் தலைமுறையினர் மத்தியில் புடவை மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றால் மிகையில்லை.
இந்த விஷயத்தை உணர்ந்த தனியா பிஸ்வாஸ் மற்றும் அவரது சகோதரி சுஜாதா பிஸ்வாஸ் உடன் இணைந்து சிறிய அளவில் உருவாக்கப்பட்ட புடவை பிஸ்னஸ் இன்று 56 கோடி ரூபாய் மதிப்பிற்கு விரிவடைந்துள்ளது. அனைத்தையும் விட முக்கியமாக இன்றைய இணைய வர்த்தகத்தில் ஒரு வாடிக்கையாளர் ஒரு முறை பொருளை வாங்குவதே பெரிய விஷயமாக இருக்கும் வேளையில் சுமார் 40- 45 சதவீதம் வாடிக்கையாளர்கள் திரும்ப திரும்ப இவர்களுடைய நிறுவனத்தில் இருந்து வாங்குகிறார்கள் என்பது வியக்கவைக்கும் விஷயமாக உள்ளது.

ஐஐஎம் லக்னோவில் 2013 ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற தனியா பிஸ்வாஸ் டாடா குழுமம், ஐபிஎம் போன்ற முன்னணி நிறுவனத்தில் பணியாற்றிய பின்னர், தனது சகோதரி சுஜாதா பிஸ்வாஸ் உடன் இணைந்து தொழில் முனைவோர் பயணத்தைத் தொடங்கினார். இந்த சகோதரிகளின் பயணம் மாபெரும் வெற்றி அடைந்தது.
தனியா பிஸ்வாஸ் மற்றும் சுஜாதா பிஸ்வாஸ் இணைந்து 2016 இல் ஒரு புடவை பிராண்டை அறிமுகப்படுத்தினர், மெல்ல மெல்ல வளர்ந்து வந்த இந்த பிராண்டின் வர்த்தகம் இப்போது 50 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பை பெற்றுள்ளது. இவர்களின் புடவை பிராண்டின் பெயர் சூதா (Suta), இருவரின் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களிலிருந்து உருவாக்கப்பட்டது.

பிஸ்வாஸ் சகோதரிகளின் Suta பிராண்ட் புகழ்பெற்ற மென்மையான மல்மல் காட்டன் புடவைகளை விற்பனை செய்கிறது. மல்மல் காட்டன் புடவைகள் உடன் தங்களின் அழகான டிசைன்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த புடவைகள் பெண்கள் வீட்டில் இருக்கும் போது அணியப்படும் ஒன்றாக இருப்பதால் ஆரம்பம் முதல் அதிகப்படியான வரவேற்பும், விற்பனையும் பதிவானது.
ஏன் மல்மல் காட்டன் புடவைகள்..? பிஸ்வாஸ் சகோதரிகள் இந்த புடவைகளை விற்பனை செய்ய முக்கிய காரணம் தங்கள் தாய் மற்றும் பாட்டி அணிந்த புடவைகளை யாரும் விற்கவில்லை என்பதை அவர்கள் கண்டுபிடித்தனர். இது மட்டும் அல்லாமல் சந்தையில் கண்மூடித்தனமாக பல புடவைகளால் சிறப்பான தரம் கொண்ட புடவைகளுக்கு இடம் காணாமல் போனதையும் கண்டுப்பிடித்தனர்.
இது மட்டும் அல்லாமல் மல்மல் காட்டன் புடவைகளை வயதான பெண்கள் அல்லது விதவைகள் மட்டுமே அணிவார்கள் என்ற கருத்தை மாற்ற வேண்டும் எனவும் பிஸ்வாஸ் சகோதரிகள் விரும்பினர். Suta பிராண்ட்-ஐ உருவாக்குவதற்கு முன்பு பல தொழில்களை செய்து பெரும் தோல்வியை சந்தித்தனர். அதன்பின்பு தான் புடவைகளை வடிவமைக்க ஆரம்பித்தனர்.

2016 இல் பிஸ்வாஸ் சகோதரிகள் இருவரும் தங்களின் அதிகப்படியான சம்பளம் தரும் வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக தொழிலைத் தொடங்கினார்கள். இருவரும் தலா ரூ.3 லட்சம் முதலீடு செய்தனர். சரியான துணியைப் பெற அவர்கள் கடுமையாகப் போராடினர். பெண்கள் புடவையை அணியும் போது ஸ்டார்ச் ஆகாத துணியை கண்டுப்பிடிக்க நீண்ட காலம் எடுத்துக்கொண்டனர்.

இந்த தேடுதல் வேட்டையில் மேற்கு வங்காளத்தின் சாந்திபூரில் உள்ள ஒரு நெசவாளர் கணவன் - மனைவி ஜோடியை அவர்கள் கண்டுபிடித்தனர், அவர்களுக்காக இந்த ஆடைகளை வடிவமைக்க ஒப்புக்கொண்டனர். இங்கிருந்து தான் SUTA பிராண்டின் தொழிலைத் தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் வர்த்தகம் மந்தமாக இருந்தாலும் பின்னாளில் வெறும் 5-6 நாளில் மொத்த ஸ்டாக்-ம் விற்பனை செய்யப்பட்டது. SUTA புடவைகளின் விலை ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை உள்ளது. இந்த விற்பனை விலையில் நெசவாளர்களுக்கு 30-40 சதவீதம் வழங்கப்படுகிறது.

2022-2023 நிதியாண்டில் SUTA நிறுவனத்தின் வருவாய் 56 கோடி ரூபாயாக இருந்தது. அவர்களின் ஆரம்ப முதலீடு ரூ.6 லட்சம் மட்டுமே, இந்த நிலையில் அடுத்த ஆண்டு ரூ.100 கோடி சம்பாதிக்க விரும்புகிறார்கள் தனியா பிஸ்வாஸ் மற்றும் சுஜாதா பிஸ்வாஸ் சகோதரிகள். அடுத்த ஆண்டு இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யவும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications