பொதுவாக ஒரு பங்கின் வளர்ச்சியை, அந்நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி குறித்த தெளிவு, வலுவான நிதி, நியாயமான மதிப்பீடு மற்றும் அந்த நிறுவனம் சார்ந்த தொழில்துறையின் வளர்ச்சி திறன் உள்ளிட்ட சில முக்கியமான அம்சங்களை வைத்து மதிப்பிடலாம் என்று பங்குச் சந்தை நிபுணர்களும், அனுபவமுள்ளவர்களும் என்று கூறுகின்றனர். இருந்தாலும், நிபுணர்கள் கூறும் அத்தனை அம்சங்களும் இருந்தாலும் குறிப்பிட்ட பங்கு மல்டிபேக்கர் வருமானத்தை தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
அதனால ரொம்ப மண்டைய போட்டு குழப்பாமல், ஒரு நல்ல பங்கை நியாயமான விலையில் வாங்கி, பொறுமையாக காத்திருந்தால் நல்ல ஆதாயத்தை பெறலாம். இதற்கு நல்ல உதாரணம் தன்லா பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் கிளவுட் தகவல்தொடர்பு சேவைகள் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் இது ஒரு சாதரண பென்னி பங்காக இருந்தது, ஆனால் தற்போது வரை இப்பங்கின் விலை 13,000 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் தன்லா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 13,340 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இந்த காலத்தில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.3.90லிருந்து ரூ.524.15ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் இந்நிறுவன பங்குகளில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.1.34 கோடியாக உயர்ந்திருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 550 சதவீதம் உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் இப்பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.6.5 லட்சமாக அதிகரித்து இருக்கும்.
நீண்ட காலத்துக்கு இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு அள்ளி கொடுத்த போதிலும், குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகள் இப்பங்குக்கு ஒரு மோசமான காலமாக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 64 சதவீதம் சரிந்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் இப்பங்கின் விலை 46 சதவீதம் வீழ்ச்சி கண்டது. 2024 ஜூலை 15ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே தன்லா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவன பங்கின் விலை 52 வார புதிய உச்சமான ரூ.1.086.05ஆக இருந்தது. கடந்த 12ம் தேதியன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 52 வார புதிய குறைந்தபட்சமான ரூ.515.90க்கு சென்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications